For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சூயஸ் டிராபிக் ஜாம்... ஒரு நாளுக்கு இத்தனை கோடி நஷ்டமா? கப்பல் உரிமையாளர் எடுத்த அதிரடி முடிவு

Google Oneindia Tamil News

கெய்ரோ: சூயஸ் கால்வாயில் தரைதட்டி நிற்கும் கப்பல் இன்று மீண்டும் கடலில் மிதக்க வைக்கும் முயற்சிகல் மேற்கொள்ளப்படும் என்று அக்கப்பலின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை நான்கு கால்பந்து மைதானம் நீளம் கொண்ட எம்வி எவர் க்ரீன் என்ற கப்பல், சூயஸ் கால்வாயில் சென்று கொண்டிருந்தது. அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் பலத்த காற்று அடிக்கவே அந்தக் கப்பல் தரைதட்டி நின்றது.

Megaship Blocking Suez Canal May Be Refloated Today says, Owner

இதன் காரணமாக சூயஸ் கால்வாயில் மற்ற கப்பல்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சர்வதேச அளவில் சூயஸ் கால்வாய் மிக முக்கிய வழித்தடமாகப் பார்க்கப்படுகிறது. இப்போது ஏற்பட்டுள்ள இந்த விபத்து காரணமாக அங்கு இருபுறமும் சுமார் 400 கப்பல்கள் அணி வகுத்து நிற்கின்றன.

இதனால் சர்வதேச வணிகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சூயஸ் கால்வாயில் நிலைமை எப்போது சரியாகும் என்று உறுதியாகத் தெரியாததால் சில கப்பல்கள் ஆப்பிரிக்காவைச் சுற்றிச் செல்வது குறித்தும் ஆலோசித்து வருகிறது. அப்படி ஆப்பிருக்கவை சுற்றிச் சென்றால் கூடுதலாக 12 நாட்கள் ஆகும். இதனால் ஆகும் எரிபொருள் செலவும் நேர விரயமும் அதிகம். மேலும், இதனால் தினசரி சுமார் 9.6 பில்லியன் சரக்குகள் எடுத்துச் செல்லப்படுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்திற்கு ரூ.1 கோடி, பொருளாதார ரீதியில் இடஒதுக்கீடு.. இந்து மக்கள் கட்சி அதிரடி தேர்தல்அறிக்கைகுடும்பத்திற்கு ரூ.1 கோடி, பொருளாதார ரீதியில் இடஒதுக்கீடு.. இந்து மக்கள் கட்சி அதிரடி தேர்தல்அறிக்கை

இந்நிலையில், சூயஸ் கால்வாயில் தரைதட்டி நிற்கும் கப்பல் இன்று மீண்டும் கடலில் மிதக்க வைக்கப்படும் என்று அக்கப்பலின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். கப்பல் உள்ளே தண்ணீர் செல்லவில்லை. அதேபோல கப்பலில் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. தற்போது தரைதட்டியுள்ள கப்பல் மிதக்கத் தொடங்கியதும் அது வழக்கம் போலச் செயல்படும் என்று அவர் தெரிவித்தார்.

தற்போது கப்பலின் அடியே சிக்கியுள்ள சேறு மற்றும் மணல் கழிவுகளை நீக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுவதாகத் தெரிவித்த அவர், இன்று இரவு கப்பலை மிதக்க வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

English summary
Suez Canal traffic latest update, Megaship May Be Refloated Today says Owner.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X