Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உலக அழகி பட்டம் வென்றார் மெக்சிகோவின் வனசா பொன்ஸ் டி லியோன்! தவறவிட்டார் திருச்சி அனுகீர்த்தி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சீனாவில் நடைபெற்ற 2018ம் ஆண்டுக்கான உலக அழகி போட்டியில் மெக்சிகோவை சேர்ந்த வனசா பொன்ஸ் டி லியோன் உலக அழகி (Miss World) பட்டத்தை வென்றுள்ளார். இந்தியா சார்பில் பங்கேற்ற அனுகீர்த்தி டாப் 12 இடங்களுக்குள் முன்னேறவில்லை.

சீனாவின் சான்யா நகரில் 68வது உலக அழகி போட்டி நடைபெற்றது. மொத்தம் 118 பெண்கள் இதில் பங்கேற்றனர். இந்தியா சார்பில் தமிழகத்தின் திருச்சியில் பிறந்தவரான அனுகீர்த்தி பங்கேற்றார்.

Mexicos Vanessa Ponce de Leon is Miss World 2018

அனு கீர்த்தி டாப் 30 வரிசையில் இடம் பெற்றபோதிலும், டாப் 12 இடங்களுக்குள் வரமுடியவில்லை. இதனிடையே இன்று நடைபெற்ற இறுதி போட்டியில், மெக்சிகோவை சேர்ந்த வனசா பொன்ஸ் டி லியோன் (26) 2018ம் ஆண்டின் உலக அழகி பட்டத்தை வென்றார்.

இவருக்கு கடந்த வருடம் உலக அழகி பட்டத்தை வென்ற இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லர் உலக அழகிக்கான கிரீடத்தை சூட்டினார்.

இந்த போட்டியில் 2வது இடத்தை தாய்லாந்தைச் சேர்ந்த நிகோலெனே பிசபா லிம்ஸ்நுகன் (20) பெற்றுள்ளார். அடுத்து மூன்று இடங்களை பெலாரஸ், ஜமைக்கா மற்றும் உகாண்டாவைச் சேர்ந்த அழகிகள் பிடித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+