For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மைக்கேல் ஷூமாக்கரால் இனி அடுத்தவர்கள் உதவி இன்றி வாழ முடியாதாம்

By Siva
Google Oneindia Tamil News

பெர்ன்: கோமாவில் இருந்து கடந்த வாரம் மீண்ட பார்முலா நம்பர் ஒன் கார்பந்தய வீரரான மைக்கேல் ஷூமாக்கரால் இனி தனது வாழ்நாள் முழுவதும் எதையும் தானாக செய்ய முடியாது என்று மருத்துவ நிபுணர் எரிக் ரீடெரர் தெரிவித்துள்ளார்.

பார்முலா ஒன் கார் பந்தய வீரரான மைக்கேல் ஷூமாக்கர் கடந்த டிசம்பர் மாதம் 29ம் தேதி பிரான்ஸில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் பிரான்ஸில் உள்ள கிரனோபல் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அவர் கோமாவில் இருந்தார்.

6 மாதங்கள் கழித்து அவர் கடந்த 16ம் தேதி கோமாவில் இருந்து மீண்டார்.

சுவிட்சர்லாந்து

சுவிட்சர்லாந்து

ஷூமாக்கருக்கு நினைவு வந்ததும் அவரது குடும்பத்தார் அவரை சுவிட்சர்லாந்துக்கு ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்று அங்குள்ள லாசான் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

வாழ்நாள் முழுதும்

வாழ்நாள் முழுதும்

ஷூமாக்கர் கோமாவில் இருந்து மீண்டபோதிலும் அவர் இனி தனது வாழ்நாள் முழுவதும் தானாக எதையும் செய்ய முடியாமல் தான் இருப்பார் என்று பிரபல நரம்பியல் நிபுணர் எரிக் ரீடரர் தெரிவித்துள்ளார்.

உட்கார்ந்தால்

உட்கார்ந்தால்

ஷூமாக்கரால் இனி அடுத்தவர்களின் உதவி இன்றி வாழ முடியாது. அடுத்த மூன்று மாதங்களில் அவர் தானாக எழுந்து உட்கார்ந்தாலும், 6 மாதங்களுக்குள் எலக்ட்ரிக் வீல் சேரை அவராக இயக்கினாலுமே அது பெரிய வெற்றி என்றார் எரிக்.

மீண்டது

மீண்டது

தலையில் அடிபட்டு ஒரு ஆண்டில் பாதி மாதங்கள் கோமாவில் இருந்த ஒருவர் அதில் இருந்து மீண்டதே பெரிய விஷயம் தான். இது ஷூமாக்கரின் குடும்பத்திற்கு மிகவும் முக்கியமானது என்று எரிக் தெரிவித்தார்.

டாக்டர்

டாக்டர்

ஷூமாக்கர் பற்றி அவரின் முன்னாள் டாக்டரான கேரி ஹார்ட்ஸ்டெய்ன் கூறுகையில், அவரால் முழுமையாக சுயநினைவோடு இருக்க முடியாது என்றார்.

English summary
Famous neurology specialist Erich Riederer told that the formula one legend Michael Schumacher who recovered from coma on june 16 will remain invalid for the rest of his life.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X