திருப்பி அடிக்க தொடங்கிய ஆப்கன் ராணுவம்.. இரண்டே நாட்களில் 572 தாலிபான்கள் பலி.. திடீர் திருப்பம்!
காபூல்: ஆப்கானிஸ்தானில் ஷெபர்கன் நகரில் பதுங்கியிருந்த தாலிபான்களைக் குறி வைத்து நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் சுமார் 200க்கும் மேற்பட்ட தாலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்த அமெரிக்கப் படைகள் மெல்ல வெளியேறத் தொடங்கியுள்ளது, இன்னும் சில வாரங்களில் அமெரிக்கப் படைகள் மொத்தமாக வெளியேறிவிடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கிய மறுகணமே ஆப்கன் ராணுவம் மீது தாலிபான்கள், தங்கள் தாக்குதலைத் தொடங்கிவிட்டனர்.
|
தாலிபான்கள்
அமெரிக்கப் படைகள் வெளியைத் தொடங்கியதும் தாலிபான்கள் தாக்குதல் நடத்துவார்கள் எனத் தெரிந்தாலும், அவர்கள் இவ்வளவு வலுவாக இருப்பார்கள் என்பதை ஆப்கன் ராணுவம் கணிக்கத் தவறிவிட்டது என்றே சொல்ல வேண்டும். அதனால் தான் வெறும் சில வாரங்களில் ஆப்கன் நாட்டில் சுமார் 80% பகுதிகளைத் தாலிபான்களால் கைப்பற்ற முடிந்தது. அதிலும், பல இடங்களில் ஆப்கன் ராணுவம் எவ்வித போராட்டமும் இல்லாமல் சரணடைந்துவிட்டதாகவும் தகவல் வெளியானது

பதில் தாக்குதல்
இதனால் இன்னும் நான்கு அல்லது ஆறு வாரங்களில் ஆப்கனில் தற்போதுள்ள அரசு கவிழ்க்கப்பட்டு, தாலிபான்கள் தலைமையில் அரசு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலைமையை சுதாரகரித்துக் கொண்ட ஆப்கன் ராணுவமும் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளன. சில பகுதிகளை தாலிபான்களிடம் இருந்து ஆப்கன் ராணுவம் மீண்டும் கைப்பற்றியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

500க்கும் மேற்பட்ட தாலிபான்கள் பலி
இந்தச் சூழலில் ஆப்கானிஸ்தானில் ஷெபர்கன் நகரில் பதுங்கியிருந்த தாலிபான்களைக் குறி வைத்து நடத்தப்பட்ட அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் சுமார் 200க்கும் மேற்பட்ட தாலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ஆப்கன் பாதுகாப்புத் துறை அதிகாரி ஃபவாத் அமான் ட்வீட் செய்துள்ளார். இப்படி பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் மொத்தம் 572 தாலிபான்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், மேலும் சிலர் காயமடைந்துள்ளதாகவும் ஆப்கன் பாதுகாப்புத் துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த அல்-காய்தா பயங்கரவாதிகள்
அதேபோல ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தில் புறநகர்ப் பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அல்-காய்தா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த மூன்று பாகிஸ்தானியர்கள் உட்படக் குறைந்தது 45 தாலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ஆப்கன் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை, லஷ்கர் காவின் புறநகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் இதேபோல அல்-காய்தாவுடன் தொடர்புடைய 30 பாகிஸ்தானியர்கள் உட்பட 112 தாலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புதிய பகுதிகளை கைப்பற்றும் தாலிபான்கள்
ஆனால் மறுபுறம் தாலிபான்களில் தாக்குதலும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. முதலில் எல்லபைபகுதிகளையும் ஊரக பகுதிகளையும் கைப்பற்றி வந்த தாலிபான்கள், இப்போது நகரங்களை நோக்கித் தாக்குதல்களைத் தொடங்கிவிட்டனர். கடந்த வெள்ளிக்கிழமை தெற்கு நிம்ரோஸ் மாகாணத்தின் தலைநகர் ஜராஞ்ச்சை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். அதைத் தொடர்ந்து சனிக்கிழமை ஜவ்ஜானில் உள்ள ஷெபர்கன் நகரத்தைக் கைப்பற்றினர். இந்நிலையில், இப்போது வடக்கில் குண்டுஸ் மற்றும் சார்-இ-புல் ஆகிய நகரங்களையும் தற்போது தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். கடந்த மூன்று நாட்களில் மட்டும் நான்கு முக்கிய நகரங்களைக் கைப்பற்றியுள்ளது தாலிபான்களுக்கு உற்சாகத்தைத் தரும் வகையில் உள்ளது. முன்னதாக, ஆப்கானில் தற்போதுள்ள அஸ்ரப் கானி அரசு நீக்கப்படும் வரை அமைதி திரும்ப வாய்ப்பே இல்லை எனத் தாலிபான்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications