For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டொனால்ட் டிரம்ப் அப்படிப்பட்ட ஆள்தான்.. முக்கால்வாசி அமெரிக்கர்கள் கூறுகிறார்கள்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: டொனால்ட் ட்ரம்ப் மீதான பாலியல் புகார்களில் உண்மை இருக்கலாம் என அமெரிக்கர்களில் 70 சதவீதம் பேர் கூறுவதாக ஒரு வாக்கெடுப்பு கூறுகிறது.

குடியரசு கட்சியின் சார்பில் அமெரிக்க அதிபர் தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் மீது பாலியல் புகார்கள் குவிகின்றன. 2005ம் ஆண்டில் டிரம்ப் ஒரு பெண் பற்றி பேசிய ஆபாச பேச்சு ஆடியோ சமீபத்தில் வெளியானது. பல பெண்கள் டிரம்ப் மீது புகார்களையும் கூறினர்.

Most Americans believe allegations against Trump: Poll

இந்த நிலையில், அடுத்த மாத தொடக்கத்தில் தேர்தலை அமெரிக்கா சந்திக்க உள்ளது. டிரம்ப் மீதான புகாரை மக்கள் நம்புகிறார்களா என்பதை அறிய, AP-GfK நிறுவனம், கருத்துக் கணிப்பு நடத்தியது. இதில் அதிர்ச்சி என்னவென்றால் 70 சதவீதம் மக்கள், "ஆம்.. டிரம்ப் அப்படி செய்ய கூடிய ஆள்தான்" என்று கூறியுள்ளனர்.

டிரம்பின் ஆதரவாளர்களில் 35 சதவீதம் பேர்கூட, அவர் மீது இந்த விஷயத்தில் தங்களுக்கு நம்பிக்கையில்லை என்றே கூறியுள்ளது அதிர்ச்சியின் உச்சம்.

குற்றச்சாட்டுகளை டிரம்ப் மறுத்தபோதிலும், அதை ஏற்க மக்கள் தயாராக இல்லை என்பதையே இந்த கருத்துக் கணிப்பு காண்பிக்கிறது. தேர்தல் நேரத்தில் இது டிரம்ப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம். ஆனால், எதிர் வேட்பாளர் ஹிலாரியின் கணவர் பில் கிளிண்டன், பாலியல் சேட்டைகள் செய்த விவகாரத்தை டிரம்ப் பேசத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Despite Republican presidential nominee Donald Trump's denial that he ever acted sexually aggressive towards women, a new poll found that an overwhelming majority of Americans believe the women who accused Trump of kissing or groping them without consent.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X