For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கர்ப்பமாக இருக்கும்போது மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை எடுக்கும் பெண்களுக்கு ”ஆரோக்கியமான குழந்தை”

Google Oneindia Tamil News

லண்டன்: கர்ப்பமாக இருக்கும்போது மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்ற பெண்களுக்கு ஆரோக்கியமான குழந்தைகள் பிறந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ராயல் காலேஜ் ஆப் அப்ஸ்ட்ரீஷியன்ஸ் மற்றும் கைனகாலஜிஸ்ட்ஸ் நிபுணர்கள் இது குறித்து தெரிவிக்கையில், "இளம்பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவது அரிது.

Most women treated for breast cancer before or during pregnancy go on to have healthy babies, experts say

ஆனால், இப்போது கர்ப்பமாக இருக்கும்போது மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்த பெண்கள் மற்றும் சிகிச்சைக்கு பின் கர்ப்பமாகும் பெண்களுக்கு ஆரோக்கியமான குழந்தைகள் பிறந்துள்ளது" என தெரிவித்துள்ளனர்.

மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்ற பிறகு குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் இது குறித்து தெரிவித்த அதிகாரி ஒருவர், "கர்ப்பமாக இருக்கும்போது மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவது அரிது. கர்ப்பமாக இருக்கும்போது தனக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு உள்ளதென ஒரு பெண்ணிற்கு தெரியவந்தால் அது பயத்தை ஏற்படுத்தும்.

பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு முழு கவனம் செலுத்தும் வகையில், பிரத்யேகமான மருத்துவ உதவி அளிக்கப்பட்டு தாயும், சேயும் பாதுகாப்பாக பராமரிக்கப்படுகின்றனர்" எனக் கூறினார்.

English summary
Most women treated for breast cancer during pregnancy or women who become pregnant after undergoing treatment for the disease go on to have healthy babies, experts have said. Breast cancer is rare in younger women, although The Royal College of Obstetricians and Gynaecologists (RCOG) say that the number who go on to have babies after being treated for the disease is increasing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X