For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சவுதி அரேபியா: மதீனாவில் தொடர் குண்டுவெடிப்பு

By Karthikeyan
Google Oneindia Tamil News

துபாய்: சவுதி அரேபியா நாட்டில் மதினா, காடிஃப் ஆகிய இரண்டு நகரங்களில் புனித தலங்கள் அருகில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரம்ஜான் பண்டிகையை ஒட்டி பல்வேறு நாடுகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் கூடியிருந்த நிலையில் தற்காலை படை தாக்குதல் நடந்துள்ளது. மேலும் இருவர் உயிரிழந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Multiple bomb blasts rock Saudi Arabian cities of Qatif, Medina

முன்னதாக, காடிஃப் நகரில் மற்றொரு வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. காடிஃப் மைனாரிடி ஷியா முஸ்லீம்கள் வாழும் பகுதியாகும். ஷியா பிரிவினரின் மசூதியை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதேபோல், ஜெத்தா நகரில் உள்ள அமெரிக்க தூதரம் அருகே சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் வெடிகுண்டை வெடிக்க செய்து உயிரிழந்தார். இதில் பாதுகாப்பு அதிகாரிகள் இருவர் காயமடைந்தனர்.

அமெரிக்க சுதந்திர தினத்தில் சவுதியில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் பரபரபை ஏற்படுத்தியுள்ளது. ரமலான் நோன்பு காலத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடுகளில் இன்று மட்டும் இஸ்தான்புல், டாக்கா, மதீனா என தீவிரவாத தாக்குதல் நடைபெற்றுள்ளது.

English summary
Riyadh: A suicide bomber detonated a device in Medina, Saudi Arabia, the second-holiest site in Islam, Saudi-owned al-Arabiya television reported on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X