For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இறந்தவர் உயிரோடு வந்த அதிசயம்.. பாகிஸ்தானின் நாடகம் அம்பலம் ”மும்பை தாக்குதல்” குற்றவாளி கைது

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: மும்பை பயங்கரவாத தாக்குதலில் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறப்பட்ட ஷாஜித் மிர் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி மும்பையின் தாஜ் ஓட்டல், சிஎஸ்டி ரயில் நிலையம், டிரிடென்ட் ஓட்டல், காமா மருத்துவமனை என பல இடங்களில் பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல்களை நடத்தினர்.

சொந்த பள்ளியில் அட்மிஷனுக்கே லஞ்சமா?.. ரூ 6 லட்சத்தை ஏமாற்றியதாக பாஜக நிர்வாகி மதுவந்தி மீது புகார்சொந்த பள்ளியில் அட்மிஷனுக்கே லஞ்சமா?.. ரூ 6 லட்சத்தை ஏமாற்றியதாக பாஜக நிர்வாகி மதுவந்தி மீது புகார்

இதில் அப்பாவி பொதுமக்கள் 170 பேரும் பயங்கரவாதிகள் 9 பேரும் கொல்லப்பட்டனர். இதில் கைதான அஜ்மல் கசாபுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

3 முக்கிய குற்றவாளிகள்

3 முக்கிய குற்றவாளிகள்

உலகை உலக்கிய இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஹஃபீஸ் சயீது தலைமையிலான ஜமாத் உல் தாவா அமைப்பே மூளையாக செயல்பட்டது விசாரணையில் தெரியவந்தது. குற்றம்சாட்டப்பட்ட ஹஃபீஸ் சயீது, ஜாஹிருர் ரஹ்மான், லஷ்கர் இ தொய்பாவை சேர்ந்த ஷாஜித் மிர் உள்ளிட்டோரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என பாகிஸ்தானிடம் இந்தியா கோரி வந்தது.

உயிரிழந்ததாக அறிவித்த பாகிஸ்தான்

உயிரிழந்ததாக அறிவித்த பாகிஸ்தான்

ஆனால், அவர்களை இந்தியாவிடம் பாகிஸ்தான் ஒப்படைக்கவில்லை. இது தொடர்பாக அமெரிக்கா தலையிட்ட பின்னர் ஹஃபீஸ் சயீது மற்றும் ஜாஹிருர் ரஹ்மான் உள்ளிட்டோரை பயங்கரவாதத்துக்கு நிதியுதவி வழங்கிய வழக்கில் பாகிஸ்தான் அரசு கைது செய்தது. மற்றொரு முக்கிய குற்றவாளியான லஷ்கர் இ தொய்பாவை சேர்ந்த ஷாஜித் மிர் விபத்து ஒன்றில் உயிரிழந்துவிட்டதாக பாகிஸ்தான் அரசு சில ஆண்டுக்கு முன் அறிவித்தது.

இறந்ததாக சொல்லப்பட்டவர் நேற்று கைது

இறந்ததாக சொல்லப்பட்டவர் நேற்று கைது

ஆனால், பாகிஸ்தான் பொய் சொல்வதாகவும் ஷாஜித் மிர் உயிருடனே இருப்பதாகவும் இந்தியா தரப்பில் கூறப்பட்டு வந்தது. அவர் உயிருடன் இருப்பதற்கான ஆதாரங்களையும் இந்திய உளவுத்துறை திரட்டி வந்தது. இந்த நிலையில் விபத்து இறந்துவிட்டதாக கூறப்பட்ட ஷாஜிஜ் மிர்ரை நேற்று பாகிஸ்தான் ராணுவம் கைது செய்து இருக்கிறது. பயங்கரவாத இயக்கத்திற்கு நிதி உதவி வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

 15 ஆண்டுகள் சிறை

15 ஆண்டுகள் சிறை

இதனையடுத்து கராச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஷாஜித் மிர்ருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இந்தியா திரட்டிய ஆதாரங்களை வெளியில் விட்டால் சர்வதேச தடைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை வரும் என்ற நெருக்கடியின் காரணமாகவே ஷாஜித் மிர்ரை பாகிஸ்தான் அரசாங்கம் அவசர அவசரமாக கைது செய்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
Mumbai Attack terrorist believed to died arrested in Pakistan: மும்பை பயங்கரவாத தாக்குதலில் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறப்பட்ட ஷாஜித் மிர் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X