For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சொந்த நாட்டு மக்கள் மீதே ஏவுகணை தாக்குதல்.. மியான்மரில் கொடூரம்.. உள்நாட்டு போர் வெடிக்கும் அபாயம்

Google Oneindia Tamil News

மியான்மர்: மியான்மரில் ராணுவ ஆட்சி காரணமாக உள்நாட்டு போர் வெடிக்க வாய்ப்பு உள்ளதாக ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது.

மியான்மரில் ஆளும் அரசை கலைத்துவிட்டு அங்கு ராணுவம் ஆட்சியை பிடித்து உள்ளது. கடந்த பிப்ரவரி 1ம் தேதி வெளியான மியான்மர் பாராளுமன்ற தேர்தல் முடிவில் ஆங் சன் சுகியின் நேஷனல் லீக் ஆப் டெமாக்ரசி கட்சி மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது.

தேர்தல் முடிவு முறைகேடானது, அதனால் முடிவை நிறுத்திவைத்துவிட்டு ராணுவம் ஆட்சி பொறுப்பை ஏற்கும் என்று அந்நாட்டு ராணுவ தளபதி அறிவித்தார்.

போராட்டம்

போராட்டம்

பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு மியான்மர் ராணுவ தளபதி மின் ஆங் ஹலாய்ங் ஆட்சியை கைப்பற்றி உள்ளார். இங்கு ராணுவ ஆட்சி வந்த பின் மக்களுக்கு எதிராக கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. ராணுவத்திற்கு எதிராக போராடும் மக்கள் மீது அந்நாட்டு ராணுவம் துப்பாக்கி சூட்டை நடத்தி வருகிறது.

ஏவுகணை

ஏவுகணை

இந்த நிலையில் மியான்மரில் தற்போது ராணுவத்தின் அட்டூழியம் மிக மோசமாகி உள்ளது. அங்கு ராணுவ ஆட்சிக்கு எதிராக கரேன் நேஷனல் யூனியன் புரட்சிகர அமைப்பு போராடி வருகிறது. இந்த அமைப்புதான் மியான்மரின் தென் பகுதியில் இருக்கும் பெரும்பாலான கிராமங்களில் வசிக்கிறது. அங்கு ராணுவ ஆட்சிக்கு எதிராக கேஎன்யூ அமைப்பினர் கடுமையான போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

ராணுவம்

ராணுவம்

இவர்களுக்கு எதிரான மியான்மர் ராணுவம் தற்போது ஏவுகணை தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது. கேஎன்யூ நிர்வாகிகள் இருக்கும் நகரங்கள், கிராமங்களில் மியான்மர் ராணுவம் கடுமையான ஏவுகணை தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் பல கிராமங்களில் மியான்மர் ராணுவம் ஏவுகணை மூலம் கடுமையான தாக்குதல்களை நிகழ்த்தி உள்ளனர்.

பலி

பலி

இந்த ஏவுகணை தாக்குதல்களில் இதுவரை 480க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் மியான்மரில் நடக்கும் விஷயங்களை பார்த்தால் அந்த நாடு ரத்த பாதையை தேர்வு செய்துள்ளது போல தெரிகிறது. அந்த நாட்டில் ராணுவம் அத்துமீறுகிறது. இதை உடனே நிறுத்தி அமைதியை கொண்டு வர வேண்டும்.

போர்

போர்

இதேநிலை நீடித்தால் மிகப்பெரிய உள்நாட்டு போர் ஏற்படுவதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது.. இங்கு நடக்கும் விஷயங்கள் அச்சம் அளிப்பதாக என்று ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐநா இப்படி எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் தற்காலிகமாக மியான்மரில் ராணுவம் அமைதிக்கு அழைப்பு விடுத்துள்ளது. ஏப்ரல் 1-30 வரை ராணுவம் தனது செயல்பாடுகளை நிறுத்த வேண்டும் என்று அந்நாட்டு ராணுவ தளபதி அறிவித்துள்ளார்.

ஐநா

ஐநா

ஆனால் மக்கள் வெளியே போராட்டம் செய்தாலோ, புரட்சி செய்ய திட்டமிட்டாலோ தொடர்ந்து ராணுவம் பதிலடி கொடுக்குமென்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதனால் மியான்மரில் இப்போதைக்கு அமைதி திரும்ப வாய்ப்பு இல்லை என்கிறார்கள். தற்போது நடக்கும் ராணுவ புரட்சி முழுமையான உள்நாட்டு போராக மாற வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

English summary
Myanmar Army rule: Full scale civil war may start due to the attack on common people says UN.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X