For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய எல்லைக்குள்தான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.. எங்கள் நாட்டுக்குள் அல்ல- மியான்மர்

Google Oneindia Tamil News

யாங்கூன்: இந்திய எல்லைக்குள்தான் தீவிரவாதிகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக மியான்மர் அரசு கூறியுள்ளது. மியான்மருக்குள் வந்து இந்திய ராணுவத்தினர் தாக்கவில்லை என்றும் அது விளக்கியுள்ளது.

முன்னதாக இந்தியப் படையினரைத் தாக்கிய தீவிரவாதிகளை, மியான்மர் எல்லைக்குள் புகுந்து இந்திய ராணுவம் தாக்கி அழித்ததாக செய்திகள் வெளியாகின. இதற்கு பலத்த வரவேற்பும் இந்தியாவில் கிடைத்துள்ளது. ஆனால் இதுகுறித்து தற்போது மியான்மர் ஒரு விளக்கத்தை அளித்துள்ளது.

Myanmar says militants were killed inside India's territory

இதுகுறித்து மியான்மர் அதிபர் மாளிகை இயக்குநர் ஸா ஹிதாய் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

அண்டை நாடுகளைத் தாக்க மியான்மர் மண்ணை யாரும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம். இந்த நாட்டில் தீவிரவாதிகளுக்கு இடமில்லை.

இருப்பினும் இந்திய ராணுவத்தின் நடவடிக்கை இந்திய எல்லைக்குள்தான் இருந்தது. மியான்மர் ராணுவம் கொடுத்த தகவலின்படி, இந்திய - மியான்மர் எல்லையில், இந்தியாவுக்கு உட்பட்ட பகுதியில்தான் இந்த நடவடிக்கை நடந்ததாக அறிகிறோம்.

எந்த வெளிநாட்டு சக்தியும், மியான்மர் மண்ணைப் பயன்படுத்தி அண்டை நாடுகளைத் தாக்குவதை அனுமதிக்க மாட்டோம் என்று அவர் கூறியுள்ளார்.

English summary
Myanmar has said the Indian forces attacked the terrorists in their border, not in Myanmar. In a Facebook post Wednesday Zaw Htay, director of Myanmar's presidential office, said that the attack took place in Indian territory.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X