ராஜபக்சவின் மகன் இலங்கையில் அதிரடி கைது! ஊழல் வழக்கில் வசமாக சிக்கினார்!

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மகனும், எம்பியுமான நமல் ராஜபக்ச ஊழல் வழக்கில் இன்று அந்நாட்டு ஊழல் தடுப்பு பிரிவினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார்.

ஏர்பஸ் விமான கொள்முதல் தொடர்பான ஊழல் வழக்கில் நமல் ராஜபக்ச தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரது கைது நடவடிக்கை நாடு முழுவதும் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

Namal Rajapaksa

காரணம் என்ன?

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக ஏர்பஸ் ரக விமானங்களை வாங்குவது தொடர்பான பணப்பரிவர்த்தனைகளில் சுமார் 100 மில்லியன் ரூபாய் லஞ்சமாக பெற்றதாக நமல் மீது குற்றச்சாட்டு இருந்தது. 2014-2015ம் ஆண்டுகளில் இலங்கை தொழிலதிபர் ஒருவர் மூலமாக பல தவணைகளாக இந்த லஞ்ச பணம் வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் ரூ.15.96 கோடியும், மற்றொரு கட்டத்தில் ரூ.7.55 கோடியும் கை மாற்றப்பட்டிருக்கிறது.

இந்த லஞ்சப பணம் முதலில் சிங்கப்பூரில் உள்ள Standard Chartered வங்கியில் BIZ Solutions Inc என்ற நிறுவனத்தின் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது. பின்னர், அதே தொழிலதிபருக்கு சொந்தமான Sabre Vision Holding Ltd என்ற நிறுவனத்தின் சிங்கப்பூர் OCBC வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டிருக்கிறது என்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

இந்த முறைகேடு தொடர்பாக பிரான்ஸ் நாட்டின் ஏர்பஸ் அதிகாரிகள் வழங்கிய தகவல்கள், டிஜிட்டல் ஆதாரங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தொழிலதிபரின் வாக்குமூலம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைய அலுவலகத்தில் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த தீவிர விசாரணைக்கு பிறகு நமல் கைது செய்யப்பட்டிருக்கிறார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை கொழும்பு தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் வரும் செப்.18 வரை ரிமாண்டில் வைக்க உத்தரவிட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+