For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

‘செவ்வாய்’க்கு ஒரு ட்ரிப்... மனிதர்களை ஏற்றிச் செல்லும் 374 அடி நீள புதிய விண்கலம்: நாசா வடிவமைப்பு

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை ஏற்றிச்செல்லும் வகையில் அதிக எடையைத் தாங்கிச் செல்லும் புதிய விண்கலம் ஒன்றை நாசா வடிவமைத்துள்ளது.

சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தைத் தொடர்ந்து செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் வேலைகளைத் தொடங்கியுள்ளது நாசா. மனிதர்களை சுமந்து செல்லும் வகையில் அதிக எடை தாங்கும் வகையில் இந்தப் புதிய விண்கலம் தயார் செய்யப் பட்டுள்ளது.

இந்தப் புதிய விண்கலத்திற்கான சோதனை ஓட்டம் வரும் 2017ம் ஆண்டில் நடைபெற உள்ளது.

384 அடி நீளம்....

384 அடி நீளம்....

இதுவரை இல்லாத அளவிற்கு இந்த விண்கலம் 384 அடி நீளம் கொண்டதாகவும், 6.5 மில்லியன் பவுண்டு எடை கொண்டதாகவும் அமைக்கப் பட்டுள்ளது.

130 டன் எடை....

130 டன் எடை....

வரும் 2017 ஆம் ஆண்டு நடைபெற உள்ள இதன் முதல் சோதனை ஓட்டத்தில், இது விண்வெளிக்கு 130 டன் எடையுள்ள பொருட்களை இது தாங்கிச்செல்லும் என நம்பப் படுகிறது.

பெரிய கிரகங்களில் ஆய்வு...

பெரிய கிரகங்களில் ஆய்வு...

இந்தப் புதிய விண்கலம் மிகப்பெரிய கிரகங்களில் ஆய்வு நடத்தும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வடிவமைப்பு....

வடிவமைப்பு....

நிலவிற்கு மனிதனை ஏற்றிச்சென்ற சாதனையை முன்மாதிரியாக கொண்டு செவ்வாய் கிரகத்திற்கும் மனிதனை கொண்டு செல்லும் வகையில் இந்த விண்கலம் அமைக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞானிகள் நம்பிக்கை....

விஞ்ஞானிகள் நம்பிக்கை....

தனது முதல் கட்ட சோதனை ஓட்டத்தில் 77 டன் சுமையை சுமந்து பூமியின் சுற்றுப்பாதையை தாண்டி செல்லும் என விஞ்ஞானிகள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

முதல் விண்கலம்...

முதல் விண்கலம்...

இதுவரை எந்த விண்கலமும் சுமந்திராத 143 டன் எடை கொண்ட பொருட்களை ஏற்றிச்செல்லும் முதல் விண்கலமாக இது அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Currently under construction, NASA’s Space Launch System will be the world’s most powerful launch vehicle. Designed to enable human exploration missions to deep space destinations, including an asteroid and Mars, SLS is working toward a first launch in 2017.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X