For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பூமியை பக்கத்தில் வந்து எட்டிப் பார்த்து விட்டுப் போன ‘வித்தியாசமான’ விண்கல்

Google Oneindia Tamil News

நாசா: பூமிக்கு வெகு அருகே ஒரு எரிகல் கிராஸ் ஆகிப் போயுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இந்த விண்கல்லின் நீளம் 1.2 மைல் ஆகும்.

இந்த விண்கல்லின் பெயர் 1999ஜேடி 6 என்பதாகும். இது பூமிக்கு 70.2 லட்சம் கிலோமீட்டர் தொலைவு வரை நெருங்க வந்துள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது.

இந்த விண்கல்லின் புகைப்படங்களையும் நாசா எடுத்துள்ளது.

வித்தியாசமான விண்கல்...

வித்தியாசமான விண்கல்...

கடந்த வாரம் இந்த நிகழ்வு நடந்துள்ளது. வித்தியாசமான உருவம் கொண்ட இந்த விண்கல்லானது கடந்த ஜூலை மாதம் 24ம் தேதி பூமிக்கு அருகே வந்துள்ளது.

இடைப்பட்ட தொலைவு...

இடைப்பட்ட தொலைவு...

இது பூமிக்கு வெகு அருகில் இருந்த தொலைவை சுருக்கமாக சொல்வதானால், பூமியிலிருந்து நிலவுக்கு இடையிலான தூரத்தைப் போல 19 அடங்கு அதிகமாகும்.

டீப் ஸ்பேஸ் நெட்வொர்க் ஆண்டென்னா...

டீப் ஸ்பேஸ் நெட்வொர்க் ஆண்டென்னா...

இந்த விண்கல்லை தெளிவாகப் படம் பிடிப்பதற்காக கலிபோர்னியாவின் கோல்ட்ஸ்டோனில் உள்ள டீப் ஸ்பேஸ் நெட்வொர்க் ஆன்டென்னாவை அந்த விண்கல்லை நோக்கித் திருப்பி வைத்துள்ளது நாசா.

ஆராய்ச்சி...

ஆராய்ச்சி...

இந்த விண்கல்லின் தன்மை, அதில் உள்ளது என்ன என்பது குறித்து இதுவரை தெளிவான விளக்கம் நம்மிடம் இல்லை. இந்த விண்கல்லை ஆராய பெருமளவிலான பணம் செலவிடப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

விஞ்ஞானிகள் நம்பிக்கை...

விஞ்ஞானிகள் நம்பிக்கை...

இந்த விண்கல்லின் தன்மை குறித்துத் தெரிய வந்தால் பூமி போன்ற கிரகங்கள் எப்படி உருவாகின என்பது குறித்து அறிய முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

இடோகவா...

இடோகவா...

கடந்த வருடம் கிட்டத்தட்ட பூமி அளவிலான இடோகவா என்ற எரிகல்லை மிக நெருக்கத்தில் கென்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் ஆராய்ந்தனர். அதன் மூலம் ஒவ்வொரு எரிகல்லும் ஒவ்வொரு விதமான தன்மையுடன் இருப்பதாக கண்டறிந்தனர்.

40 வருடங்களில்...

40 வருடங்களில்...

கடந்த 40 வருடங்களில் இப்போதுதான் முதல் முறையாக ஒரு விண்கல்லானது பூமிக்கு வெகு அருகே வந்து போயுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அடுத்து இது 2054ம் ஆண்டு இதே அளவிலான தூரத்தில் பூமியை நெருங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1999ஜேடி 6 விண்கல்லானது, 1999ம் ஆம் ஆண்டு மே 12ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Nasa has captured images of a peanut-shaped asteroid as it made its closest approach to Earth last weekend.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X