For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விமானம் விழுந்து நொறுங்கி விபத்து.. 22 பேருக்கு என்ன ஆனது? - தீவிர மீட்புப் பணியில் நேபாள ராணுவம்!

Google Oneindia Tamil News

காத்மண்டு : நேபாளத்தில் 19 பயணிகள் உட்பட 22 பேருடன் சென்ற விமானம், கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமானது.

பொகாராவில் இருந்து ஜோம்சாம் விமான நிலையத்திற்கு இன்று காலை 9.55 மணியளவில் புறப்பட்ட விமானம் கிளம்பிய சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்தது.

அந்த விமானத்தில் 4 இந்தியர்கள் உட்பட 22 பேர் பயணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த விமானம் மலைப் பகுதியில் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

 விமானம் மாயம்

விமானம் மாயம்

நேபாள நாட்டின் பொகாராவில் இருந்து ஜோம்சாம் விமான நிலையத்திற்கு தாரா ஏர் நிறுவனத்தின் 9NAET ட்வின்- என்ஜின் விமானம், காலை 9.55க்கு புறப்பட்டுள்ளது. கிளம்பிய சில நிமிடங்களிலேயே அந்த விமானம் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்துள்ளது. இதனையடுத்து விமானம் எங்கு சென்றது என்ற விவரம் இல்லை.

22 பேர் பயணம்

22 பேர் பயணம்

கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்த அந்த விமானத்தில் 19 பயணிகள் உட்பட 22 பேர் பயணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விமானத்தில் 4 இந்தியர்கள், 3 ஜப்பானியர்கள் இருந்ததாகவும், மற்ற அனைவரும் நேபாள நாட்டைச் சேர்ந்தவர்கள் நேபாள நாட்டு விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மலைப்பகுதியில்

மலைப்பகுதியில்

பொகாரா அருகில் உள்ள தலகிரி என்ற மலைப்பகுதிக்கு மேலே சென்றபோது விமானம் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் தொடர்பை இழந்ததாக விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அந்த விமானம் விபத்துக்குள்ளானதா என்ற விவரம் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.

அதிக சத்தம்

அதிக சத்தம்

ஜோம்சோம் விமான நிலைய விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர், அப்பகுதியில் உள்ள காசா எனும் இடத்தில் அதிக சத்தம் கேட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவலைப் பெற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கும் அதிகாரிகள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளதாக காத்மண்டு போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

தீவிர தேடுதல் வேட்டை

தீவிர தேடுதல் வேட்டை


அந்த விமானம் கடைசியாக தொடர்பில் இருந்த தலகிரி மலைப் பகுதிக்கு ஒரு ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டுள்ளதாகவும், விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் விபத்தில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், அதில் பயணித்தவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

திரும்பிய ஹெலிகாப்டர்

திரும்பிய ஹெலிகாப்டர்

ஒரு தேடுதல் ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக விமானத்தை கண்டுபிடிக்க முடியாமல் ஜோம்சோமிற்கு திரும்பியது என்று நேபாளத்தின் சிவில் ஏவியேஷன் ஆணையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

 2016ஆம் ஆண்டில்

2016ஆம் ஆண்டில்

விமானம் மாயமானதாக கூறப்படும் பகுதி பெரும்பாலும் மலைத் தொடர்களால் சூழப்பட்டுள்ளதால், விமான விபத்து ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. 2016ஆம் ஆண்டில் இந்த மலைப் பகுதியில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 23 பேர் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கண்டுபிடிப்பு

கண்டுபிடிப்பு

நேபாளத்தில் பொகாராவில் இருந்து 22 பயணிகளுடன் கிளம்பிய நிலையில் மாயமான விமானம், நேபாளத்தின் மஸ்டாங் அருகே கோவாங் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. விமானத்தின் முழுமையான நிலை குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை என திரிபுவன் சர்வதேச விமான நிலைய தலைவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விழுந்து நொறுங்கியது

விழுந்து நொறுங்கியது

நேபாள ராணுவத்திற்கு உள்ளூர்வாசிகள் அளித்த தகவலின்படி, தாரா ஏர் நிறுவனத்தின் அந்த விமானம் மணபதி ஹிமாலின் நிலச்சரிவின் கீழ் லாம்சே ஆற்றின் முகப்பில் விழுந்து நொறுங்கியதாக தெரியவந்துள்ளது. நேபாள ராணுவம் அந்த இடத்தை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் நாராயண் சில்வால் தெரிவித்துள்ளார்.

English summary
Flight carrying 22 passengers out of contact for 1 hour in Nepal, 4 Indians onboard.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X