பிரதமர் மோடியை இந்தி மொழியில் வரவேற்ற இஸ்ரேல் பிரதமர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல் அவில்: இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சென்று வரவேற்ற அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு இந்தி மொழியில் பேசிய வரவேற்றுள்ளார்.

netanyahu welcomes modi in hindi

மூன்று நாள் அரசுமுறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் சென்றுள்ளார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை புறப்பட்ட மோடி மாலையில் இஸ்ரேல் சென்றடைந்தார். டெல் அவிவ் நகரில் உள்ள பென் குரியன் விமான நிலையத்தில் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் மோடியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு நேரில் வரவேற்றார்.

netanyahu welcomes modi in hindi

அதன்பின்னர் விமான நிலையத்திலே இருநாட்டு தலைவர்களும் உரையாற்றினார். அப்போது பேசிய பெஞ்சமின் நேதன்யாஹு, இந்தி மொழியில் பேசி மோடியை வரவேற்றார். மேலும் அவர் பேசுகையில், உலகின் சிறந்த தலைவர் மோடி அவர்களே வருக.. இந்தியாவை நாங்கள் நேசிக்கிறோம். இந்திய கலாசாரம், வரலாறு, ஜனநாயகம், எங்களுக்கு மிகவும் பிடிக்கும். பிரதமர் மோடி எனது நண்பர், அவரை வரவேற்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன். மேக் இன் இந்தியா என்பதுடன் நாங்கள் , மேக் வித் இந்தியா என இருக்கிறோம். நமது உறவுக்கு வானம் எல்லை இல்லை. மேலும் இருநாட்டு உறவுகள் விரிவாக்கம் பெறும் என்றார் பெஞ்சமின் நேதன்யாஹு.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Israeli Prime Minister Benjamin Netanyahu greets Prime Minister Narendra Modi at Ben-Gurion International Airport near Tel Aviv.
Please Wait while comments are loading...