For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏலியன்கள் பறக்கும் தட்டில் பூமியில் சுற்றுகிறார்களா..? புதிய புகைப்படங்களால் பரபரப்பு

By Veera Kumar
Google Oneindia Tamil News

மெக்சிகோ: ஏலியன்கள் எனப்படும், வேற்றுகிரகவாசிகள் இந்த உலகத்தில் உள்ளனர் என்று ஆய்வாளர் போட்டோ ஆதாரத்துடன் கூறியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

1947ம் ஆண்டு மெக்சிகோவின், ரோஸ்வெல் பகுதியில், பறக்கும் தட்டு மோதியதில், விமானம் நொறுங்கி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது எடுக்கப்பட்ட போட்டோக்களில், ஏலியன் உருவம் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை அது உறுதி செய்யப்படவில்லை.

Never before seen photos of alleged alien from Roswell crash

இந்நிலையில், மெக்சிகோவில், 10 ஆயிரம் பேர் கூடியிருந்த அரங்கத்தில், தொலைக்காட்சி வர்ணனையாளர் ஜெய்ம் மவுசன் ஒரு தகவலை வெளியிட்டு அதிர்ச்சிப்படுத்தியுள்ளார். இவர் பறக்கும் தட்டு பற்றிய ஆய்வில் ஈடுபட்டுவருவரும் கூட, என்பதால், இந்த தகவல் அதிர்ச்சியை அதிகப்படுத்தியுள்ளது.

அவர் கூறுகையில், "1947ம் ஆண்டு விமான விபத்து தொடர்பான புகைப்படங்களில் ஏலியன் இறந்து படுத்து கிடப்பதை போன்ற தோற்றம் உள்ளது. அதை சுமார் ஐந்தாண்டு கால ஆய்வு நடத்தி உறுதி செய்துள்ளோம்" என்றார்.

ஆனால், ஏலியன்கள் நடமாட்டம் பற்றி, நாசாவோ அல்லது வேறு எந்த ஆய்வு மையமோ உறுதி செய்யாத நிலையில், இவர் இவ்வாறு கூறியது, பப்ளிக் ஸ்டண்டுக்காகவா அல்லது புதிய முயற்சிக்கான முதல்படியா என்பது பற்றி விஞ்ஞானிகள் யோசிக்க ஆரம்பித்துள்ளனர்.

English summary
Whether it's a publicity stunt or not, never-before-seen photographs from the 1947's Roswell UFO crash depicting an alleged alien have emerged.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X