For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெல்டா+ஓமிக்ரான்= டெல்டாகிரான்.. சிப்ரஸில் 25 பேருக்கு புதிய வேரியண்ட்?.. நிபுணர்கள் சொல்வது என்ன?

Google Oneindia Tamil News

நிகோஸியா: டெல்டாவும் ஓமிக்ரானும் இணைந்த டெல்டாகிரான் எனும் புதிய கொரோனா வேரியண்ட் பரவி வருவதாக மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சிப்ரஸ் தெரிவித்துள்ளது.

Recommended Video

    Cyprus நாட்டில் பரவும் புதிய Variant Coronavirus.. Deltacron குறித்து நிபுணர்கள் கூறுவது என்ன?

    கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து புதிய புதிய வேரியண்ட்களாக பரவி வருகிறது. அந்த வகையில் இதுவரை ஆல்பா, பீட்டா, டெல்டா உள்ளிட்ட வேரியண்ட்கள் உலகம் முழுவதும் பரவின.

    அண்மையில் தென்னாப்பிரிக்காவில் புதிய வேரியண்ட்டான ஓமிக்ரான் உருவானது. இது தற்போது 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. புதிய வேரியண்ட் கொரோனா பரவலை தீவிரப்படுத்தி வருகிறது.

     ஓமிக்ரான் கொரோனா மின்னல் வேகத்தில் பரவ இது மட்டும்தான் காரணம்.. ஓப்பனாக கூறிய WHO... புதிய வார்னிங் ஓமிக்ரான் கொரோனா மின்னல் வேகத்தில் பரவ இது மட்டும்தான் காரணம்.. ஓப்பனாக கூறிய WHO... புதிய வார்னிங்

    டெல்டா+ ஓமிக்ரான்

    டெல்டா+ ஓமிக்ரான்

    இந்த நிலையில் சிப்ரஸ் எனும் மத்திய கிழக்கிந்திய நாடான சிப்ரஸில் டெல்டாவும் ஓமிக்ரானும் இணைந்து டெல்டாகிரான் எனும் புதிய வேரியண்ட் பரவி வருகிறது. இதுகுறித்து சிப்ரஸ் பல்கலைக்கழகத்தின் பயோடெக்னாலஜி மற்றும் மாலிகுலர் வைராலஜியின் தலைவர் லியோடியாஸ் கோஸ்டிரிகிஸ் கூறுகையில் தற்போது ஓமிக்ரானும் டெல்டாவும் பரவி வருகிறது.

    25 பேருக்கு பாதிப்பு

    25 பேருக்கு பாதிப்பு

    ஆனால் இவை இரண்டும் சேர்ந்த கலவையான புதிய வேரியண்ட்டை நாங்கள் பார்த்தோம். இதில் ஓமிக்ரான் மற்றும் டெல்டாவின் ஜீனோம்கள் இருப்பதால் அவற்றிற்கு டெல்டாகிரான் என பெயரிட்டுள்ளோம். இதுவரை சிப்ரஸில் 25 பேருக்கு டெல்டாகிரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் டெல்டாகிரான் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது விரைவில் அறியப்படலாம்.

    ஓமிக்ரானை விட வேகம்

    ஓமிக்ரானை விட வேகம்

    இந்த புதிய வேரியண்ட் ஓமிக்ரானை விட மிக வேகமாக பரவும் என்றார். இந்த வைரஸ் ஜனவரி 7ஆம் தேதி முதல் பரவி வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் டெல்டாகிரான் குறித்து உலக சுகாதார நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை. இதுகுறித்து சில வைராலஜி நிபுணர்கள் கூறுகையில் டெல்டாகிரான் என்பது புதிய வேரியண்ட் அல்ல.

    மியூடன்ட்

    மியூடன்ட்

    இது போல் ஒன்றை SARS-CoV-2 வைரஸ்களின் குடும்பத்தில் கண்டறிய முடியவில்லை. எத்தனையோ உருமாற்றங்களை கண்டாலும் எல்லா உருமாற்றங்களையும் கண்டு அஞ்ச தேவையில்லை. இது ஆர்என்ஏவில் காணப்படுகிறது. குறிப்பாக சுவாசம் தொடர்புடையது என தெரிவித்துள்ளனர்.

    English summary
    New Covid variant Deltacron detected in Cyprus? Its a combination of Delta and Omicron.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X