அபுதாபியில் புதிதாக பொறுப்பேற்ற இந்திய தூதருக்கு வரவேற்பு
அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இந்தியத் தூதராக பொறுப்பேற்றுள்ள டி.பி.சீதாராம் அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி 15.03.2014 அன்று மாலை இந்திய இஸ்லாமிக் சென்டரின் சார்பில் நடைபெற்றது.
இஸ்லாமிக் சென்டரின் பொதுச் செயலாளர் அப்துர் ரஷீது வரவேற்புரை நிகழ்த்தினார். அமைப்பின் தலைவர் பாபாஹாஜி தலைமை வகித்தார். அவர் தனது தலைமை உரையில், அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டரின் பணிகளையும் இப்பணிக்கு உதவிய மறைந்த ஜனாதிபதி ஷேக் ஜாயித் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்களையும் நினைவு கூர்ந்தார்
வரவேற்புரை நிகழ்த்திய அப்துல் ரஷீது இந்தியத் தூதரின் பணி சிறக்க வாழ்த்துவதாகவும், இந்திய மக்களுக்கான நற்சேவைகளுக்கு இஸ்லாமிக் சென்டர் எப்போதும் தயாராகவிருப்பதாகவும் தெரிவித்தார்.

ஏற்புரை நிகழ்த்திய இந்தியத் தூதர் டி. பி. சீதாராம் அவர்கள் "வேற்றுமையில் ஒற்றுமை காணும் ஒரு மிகப் பெரிய நாடு நம் நாடு. அந்த இணக்கமான வாழ்வியல் முறை நம் நாட்டிற்கு பெருமை. நாடுவிட்டு நாடு வந்துள்ள நாம் இந்நாட்டிற்கு நம்பிக்கையானவர்களாகவும் இந்நாட்டு சட்டதிட்டங்களை மதிப்பவர்களாகவும் இருக்க வேண்டும்" என்றார்.
இவ்வுரையில் தன் இளமைக் கால வாழ்க்கையை நினைவு கூர்ந்தார். சிறுவயதில் கேரளாவில் தன் படிப்பைத் தொடங்கியதையும் அதன் பிறகு தமிழகத்தில் தன் படிப்பைத் தொடர்ந்ததையும் அதனால் தான் மலையாளியாகயிருந்தாலும் மலையாளத்தில் பேசுவதை விட தமிழில் சரளமாக பேச இயலும் என்ற கூடுதல் தகவலைத் தெரிவித்தார்.

சீதாராம், மொரிஷியஷின் ஹை கமிஷனராக இருந்து அங்கிருந்து மாற்றப்பட்டுள்ளார். அமீரகத்திற்கான இந்தியத் தூதராக இருந்த எம்.கே. லோகேஷ் சுவிட்சர்லாந்துக்கான இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் அபுதாபியில் உள்ள கேரளா சமாஜம், கே.எம்.சி.சி. இந்திய மகளிர் அசோசியேஷன் உள்ளிட்ட இந்திய அமைப்புகளில் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர். உஸ்மான் ஹாஜி, சிங், சஞ்சீவ், அஜீத், ஷாஜஹான், புஷ்பா, நம்ரிதா, பொறியாளர் வி.களத்தூர் நவ்சாத்அலி, அபுதாபி அய்மான் நிர்வாகிகள் லால்பேட்டை அப்துர்ரஹ்மான், ஆவை அன்சாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications