Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புதிய கட்டத்தில் கொரோனா- கடுமையான சவால்களை எதிர்கொள்கிறோம்: சீனா அதிபர் ஜின்பிங் ஓபன்டாக்

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: சீனாவில் கொரோனா புதிய கட்டத்தில் இருக்கிறது; சீனா கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ளதாக சீனா அதிபர் ஷி ஜின்பிங் (ஜி ஜின்பிங்) தெரிவித்துள்ளார். பொது புத்தாண்டை முன்னிட்டு சீனா மக்களிடையே உரையாற்றிய போது ஷி ஜின்பிங் இதனைத் தெரிவித்தார்.

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஷி ஜின்பிங் (ஜி ஜின்பிங்) சீனா மக்களுக்கு ஆற்றிய உரை: அனைவருக்கும் வணக்கம். 2023ஆம் ஆண்டு தொடங்க உள்ளது. பெய்ஜிங்கில் இருந்து உங்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 2022ஆம் ஆண்டு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் 20ஆவது தேசிய மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது. நவீன சோஷலிச நாட்டின் விரிவான கட்டுமானத் திட்டத்தை வகுத்துள்ளோம். சீன பாணியுடைய நவீனமயமக்கத்துடன் தேசத்தின் மாபெரும் வளர்ச்சிக்கான நெடுநோக்கை விரைவுபடுத்தி, புதிய பயணத்தை நோக்கி முன்னேறத் தொடங்கியுள்ளோம்.

New phase of Coronavirus, facing tough challenges: China President Xi Jinping

உலகளவில் 2ஆவது பெரிய பொருளாதார சமூகம் என்ற தகுநிலையை சீனா தொடர்ந்து நிலைநிறுத்தியுள்ளது. நாட்டின் பொருளாதாரம் சீராக வளர்ந்து வருகிறது. முழு ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 1 கோடியே 20 லட்சம் கோடி யுவானைத் தாண்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளாவிய உணவு நெருக்கடியைச் சந்தித்த போதிலும், சீனாவின் தானிய விளைச்சல் தொடர்ந்து 19 ஆண்டுகள் அமோக அறுவடையை நனவாக்கியுள்ளது. அதோடு, வறுமை ஒழிப்புப் பணியின் சாதனையை வலுப்படுத்தி, கிராமப்புற மறுமலர்ச்சியை பன்முகங்களிலும் முன்னேற்றி, வரி மற்றும் கட்டணக் குறைப்பு உள்ளிட்ட பல நடவடிக்கைகளின் மூலம் தொழில் நிறுவனங்களுக்கு இன்னல்களைச் சமாளிக்கவும், பொது மக்களுக்கு அவசரப் பிரச்சினைகளைத் தீர்க்கவும் பாடுபட்டு வருகிறோம்.

தொற்றுநோய் பரவிய பிறகு, மக்களே முதன்மை, உயிரே முதன்மை ஆகிய கோட்பாடுகளைக் கடைப்பிடித்து, அறிவியல் ரீதியில் துல்லியமான தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு, நிலைமை மாற்றத்துக்கு ஏற்ப, இந்நடவடிக்கைகளைச் சரிப்படுத்தி வருவதால், மக்களின் உயிர் பாதுகாப்பு மற்றும் உடல் நலம் இயன்ற அளவில் பாதுகாக்கப்பட்டுள்ளது. பரந்த ஊழியர்கள் மற்றும் பொது மக்கள், குறிப்பாக மருத்துவப் பணியாளர்கள் மற்றும் அடிமட்ட பணியாளர்கள், உறுதியான துணிச்சல் மற்றும் கடினமான முயற்சியுடன், முன்கண்டிராத சிரமம் மற்றும் சவால்களைத் தோற்கடித்தோம். தற்போது நோய்தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாடு புதிய கட்டத்தில் உள்ளது. இந்நிலையில் அனைவரும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு, நம்பிக்கை மற்றும் ஒற்றுமையுடன் செயல்பட்டால் வெற்றி பெறுவது உறுதி.

2022ஆம் ஆண்டில் தோழர் ஜியாங் சேமின் காலமானார். அவரது அருஞ்செயல் மற்றும் சாதனைகளை ஆழ்ந்த முறையில் நினைவுகூர்ந்து, அவர் விட்டுச் சென்ற எழுச்சி சார் செல்வங்களைப் பேணிமதிக்கின்றோம். அவரது குறிக்கோளைப் பின்பற்றி, புதிய யுகத்தில் சீன தனிச்சிறப்புடைய சோஷலிச லட்சியத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். நீண்ட வரலாற்றில், பல தலைமுறையினர்களின் தொடர்ச்சியான முயற்சிகளால், இன்றைய சீனா உருவாக்கப்பட்டுள்ளது. இன்றைய சீனா, கனவுகளைத் தொடர்ச்சியாக நனவாக்கி வரும் சீனா. பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் மற்றும் பாரலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. விளையாட்டு வீரர்கள் பெரும் சாதனைகளைப் பெற்றனர். ஷென்சோ விண்கலங்கள் அடுத்தடுத்து விண்ணில் செலுத்தப்பட்டு, சீன விண்வெளி நிலையம் பன்முகங்களிலும் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. சீன மக்கள் படை 95ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. இராணுவ அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் மாபெரும் பயணத்தில் முன்னேறி வருகின்றனர். ஃபுஜியன் எனும் 3ஆவது விமானந்தாங்கிக் கப்பலின் பயணம், முதலாவது சி919 விமானத்தின் ஒப்புடைப்பு, பாய்ஹேடான் நீர் மின் நிலையத்தின் பன்முக இயங்குதல் போன்ற அனைத்திலும் எண்ணற்றவர்களின் பங்குகள் உள்ளன. இதுதான் சீன ஆற்றல்.

இன்றைய சீனா, உயிர்த்துடிப்பு மற்றும் ஆற்றல் மிக்க சீனா. பல்வேறு தாராள வர்த்தக சோதனை மண்டலங்களும் ஹாய்நான் தாராள வர்த்தகத் துறைமுகமும் விறுவிறுப்பாக வளர்ந்து வருகின்றன. கடலோர பகுதி புத்தாக்கத்துக்காகவும், மத்திய மற்றும் மேற்கு பகுதி விரைவான வளர்ச்சிக்காகவும், வடகிழக்கு பகுதி மறுமலர்ச்சிக்காகவும், எல்லை பகுதி மக்களின் செல்வத்துக்காகவும் செயல்பட்டு வருகின்றன. நெகிழ்வுத்தன்மை, உள்ளார்ந்த ஆற்றல் மற்றும் உயிர்த்துடிப்பு மிக்க சீனப் பொருளாதாரம் நீண்டகாலத்துக்கு சீராக வளரும் போக்கு மாறாது. நம்பிக்கையுடன் நிதானமாக முன்னேறினால், திட்டமிட்ட இலக்கு நனவாக்கப்படும். இவ்வாண்டு ஹாங்காங்கில் பயணம் மேற்கொண்ட போது, அங்குள்ள ஒழுங்கு மற்றும் வளர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். ஒரு நாட்டில் இரண்டு அமைப்புமுறைகள் என்ற கொள்கையை மாறாமல் நடைமுறைப்படுத்தினால் ஹாங்காங் மற்றும் மக்கௌ நிரந்தரமாக செழுமை மற்றும் அமைதியுடன் இருக்கும்.

இன்றைய சீனா, தேசிய எழுச்சியைப் பின்பற்றி பரவல் செய்யும் சீனா. நிலநடுக்கம், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கைச் சீற்றங்கள் மற்றும் விபத்துகள் துயரம் தந்த போதிலும், ஒருவருக்கு ஒருவர் உதவியளிக்கும் காட்சிகள் மனமுருகச் செய்துள்ளன. வீரர்களின் அருஞ்செயல்கள் எப்போதுமே எங்கள் மனதில் ஆழப்பதிந்து விடும். புத்தாண்டை வரவேற்கும்போதெல்லாம், சீனத் தேசத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நிலவி வரும் நேர்மையான எழுச்சியை நினைவுகூர்ந்து, புதிய பயணத்தின் மீதான நம்பிக்கையும் அதிகரிக்கும். இன்றைய சீனா உலகத்துடன் நெருக்கமாக இணைந்துள்ள சீனா. இவ்வாண்டில் பல நண்பர்களை பெய்ஜிங்கில் சந்தித்துள்ளேன். வெளநாடுகளில் சீனாவின் கருத்துக்களை விளக்கிக் கூறியுள்ளேன். மாறி வரும் உலகம் அவ்வளவு அமைதியாக இல்லை. அமைதி மற்றும் வளர்ச்சியையும் நண்பர்கள் மற்றும் கூட்டளிகளையும் முன்பை போல் பேணிமதிக்கும் சீனா சரியான பக்கத்திலும், மனித நாகரிக முன்னேற்றத்திலும் உறுதியுடன் நிற்கும். மனிதகுலத்தின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு சீன ஞானம் மற்றும் திட்டத்தை வழங்குவோம்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டுக்குப் பிறகு, சகப் பணியாளர்களுடன் யான் ஆன்னில் பயணம் மேற்கொண்டேன். முன்பு கட்சியின் மத்தியக் கமிட்டி அங்கே கடும் இன்னல்களைத் தோற்கடித்த காலத்தை மீளாய்வு செய்து, பழைய தலைமுறை கட்சி உறுப்பினர்களின் எழுச்சியை உணர்ந்து கொண்டோம். நூறு ஆண்டுகளில் பல்வகை சோதனைகளை தாக்குபிடித்து இன்னல்களைச் சமாளித்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பயணம் கடினமாகவும் மகத்தானதாகவும் உள்ளது என அடிக்கடி கூறுகின்றேன். சீனாவின் அருமையான எதிர்காலத்துக்கு துணிச்சல் மற்றும் உறுதியுடன் போராட வேண்டும். போராட்டத்தில் அற்புதம் உருவாக்கப்படும். மகத்தான இலக்கை அடைய இன்னல்களைத் தீர்க்க வேண்டும். இலக்கிய மேதை சூ ஷி ஒரு செய்யுளில் கூறியது போல். துணிச்சல், மனவுறுதி மற்றும் விடா முயற்சிகளோடு நடைமுறையில் ஈடுபாட்டுடன் செயல்பட்டால், மாபெரும் இலக்கை அருமையான உண்மையாக மாற்ற முடியும்.

ஒற்றுமையில் ஆற்றல் ஏற்படும். பரந்த சீனாவில் வேறுபட்டவருக்கு வேறுபட்ட தேவை ஏற்படும். ஒரே நிகழ்வு பற்றி வேறுபட்ட கருத்துகளைக் கொண்டிருப்பர். இது இயல்பு. தொடர்பு மற்றும் கலந்தாய்வு மூலம் ஒத்த கருத்தை திரட்ட வேண்டும். 140 கோடி சீன மக்கள் ஒரே இலக்கை நோக்கி ஒற்றுமையுடன் முயற்சி செய்தால், எந்த இலக்கையும் நனவாக்க முடியும், எந்த சோதனையையும் கடந்து செல்ல முடியும். தைவான் நீரிணை இருகரைகளிலுள்ள மக்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இருகரை சக நாட்டவர்கள் சீனத் தேசத்தின் நீண்டகால நன்மைக்கு ஒன்றுகூடி செயல்பட வேண்டும் என விரும்புகின்றேன். இளைஞர்கள் சீனாவின் நம்பிக்கையாகும். சீனாவின் வளர்ச்சிக்கு இளைஞர்களின் பொறுப்பு தேவைப்படுகிறது. இளமையில் உயிராற்றல் மற்றும் நம்பிக்கை நிறைந்திருக்கிறது. இளைஞர்கள் நாட்டுப்புற்றுணர்வு, நல்ல பண்பு மற்றும் போராட்ட எழுச்சியுடன் ஒவ்வொரு நிமிடத்தையும் கைப்பற்றி முன்னேற வேண்டும். இத்தருணத்தில் பலர் சுறுசுறுப்புடன் புணிபுரிந்து கொண்டிருக்கின்றனர். அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கின்றேன். புத்தாண்டுக்கான மணியொலி எழுப்பப்பட உள்ளது. எதிர்காலம் மீதான எதிர்பார்ப்புடன் 2023ஆம் ஆண்டின் புதிய சூரிய ஒளியை வரவேற்போம். நாட்டின் செழுமை, மக்களின் நலவாழ்வு, உலகளாவிய அமைதி மற்றும் இன்பம் நிலவ நல்வாழ்த்துகள். அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இவ்வாறு ஷி ஜின்பிங் கூறினார்

(ஜின்பிங்கில் உரை முழுமையாக தமிழில் - நன்றி: சீனா தமிழ் வானொலி)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+