டிரம்ப்பிற்கு மனநல சோதனை எல்லாம் செய்ய முடியாது.. வெள்ளை மாளிகை அறிக்கை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: ''இதோ அமெரிக்கா முதல் முறையாக ஒரு உடல்தகுதி மிக்க அதிபரை தேர்ந்தெடுத்துவிட்டது'' என்று டிரம்ப் வெற்றி பெற்ற போது அவரது மருத்துவர் பேசி இருந்தார். 71 வயதில் டிரம்ப் இளமையாக இருக்கிறார் என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால் அவரே டிரம்ப்பிற்கு இப்படி ஒரு மருத்துவ சோதனை வைக்கும் நிலைமை வரும் என்று நினைத்து இருக்க மாட்டார். நேற்று அவருக்கு முதல்முறையாக மருத்துவ சோதனை செய்யப்பட்டது.

அவருக்கு மனநல சோதனை எதுவும் செய்யவில்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அவர் மனநல ரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்று கடந்த ஒருவாரமாக சர்ச்சைகள் உருவானது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம்

கட்டாயம்

அமெரிக்க அதிபராக இருக்கும் எல்லோரும் மருத்துவ சோதனை செய்ய வேண்டும் என்பது கட்டாயம். கணக்குப்படி பார்த்தால் டிரம்ப் இந்த மருத்துவ சோதனையை முன்பே செய்து இருக்க வேண்டும். நேற்று நடந்த இந்த மருத்துவ சோதனையின் முடிவு 12ம் தேதி வெளியாகும். இது இணையத்தில் அனைவரும் பார்க்கும்படி வெளியாகும்.

உடல்நிலை

உடல்நிலை

டிரம்ப்பிற்கு மிகவும் நல்ல உடல்நிலை இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இன்னும் முழு அறிக்கை வரவில்லை என்றாலும் அவர் 'ஆணி' போல மிகவும் கூர்மையாக இருக்கிறார் என்று குறிப்பிட்டு இருக்கின்றனர். மேலும் அவருக்கு உடலில் பெரிய அளவில் பயமுறுத்தும் அளவிற்கு பிரச்சனைகள் எதுவும் இல்லை எனப்பட்டுள்ளது.

மனநலம் என்ன

மனநலம் என்ன

இவருடைய உணவு பழக்கவழக்கம் மட்டும் கொஞ்சம் மோசமாக இருக்கிறது. இதில் இவருக்கு மனரீதியாக எந்த சோதனையும் செய்யப்படவில்லை என்று கூறப்பட்டு இருக்கிறது. மனநல சோதனை நடத்த எந்த அவசியமும் இல்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

பிரச்சனை என்ன

பிரச்சனை என்ன

இரண்டு நாட்களுக்கு முன்பு டிரம்ப் குறித்து 'பயர் அண்ட் ஃபுரி: இன்சைட் தி டிரம்ப்ஸ் வொயிட் ஹவுஸ்' என்று புத்தகம் வெளியானது. மைக்கேல் வுல்ப் என்ற அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கையாளர் இந்த புத்தகத்தை எழுதினார். இதில் பலரும் டிரம்ப் மனநலம் பாதித்தவர் என்று குறிப்பிட்டு இருந்தனர். இதன் காரணமாகவே தற்போது வெள்ளை மாளிகை இந்த பதிலை வெளியிட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Trump took health check up for the first time after became president. White House says there is noo need of mental wellness test for Trump. They say that Trump is perfectly fine and the report will be released on Jan 12.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற