அமைதிக்கான நோபல் பரிசு: கருத்து சுதந்திரத்தைப் பாதுகாக்க போராடிய 2 பத்திரிக்கையாளர்களுக்கு அறிவிப்பு
அமைதிக்கான நோபல் பரிசு 2 பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. திமித்ரி மொரொட்டா, மரியா ரிசா பேச்சுரிமைக்காக வழங்கப்பட்டுள்ளது.
ஸ்டாக் ஹோம்: பத்திரிகையாளர்களான திமித்ரி மொரொட்டா, மரியா ரிசா ஆகிய இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. அமைதி, ஜனநாயகத்துக்கான அடிப்படையாக கருத்து சுதந்திரம் இருப்பதை வலியுறுத்தியதாக இருவருக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த 4-ம் தேதியிலிருந்து அறிவிக்கப்பட்டுவருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான மருத்துவம், இயற்பியல், வேதியியல் பிரிவில் நோபல் பரிசு பெறுபவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவத்துக்கான நோபல் பரிசு இரண்டு பேருக்கும், வேதியியலுக்கான நோபல் பரிசு இரண்டு பேருக்கும், இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது. நேற்று இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. தன்சானியா நாட்டைச் சேர்ந்த அப்துல் ரசாக்குக்கு அவருடைய வாழ்வுக்குப் பிறகு (after lives) நாவலுக்காக வழங்கப்பட்டுள்ளது. சமரசமில்லாமல் காலணித்துவத்தின் விளைவுகள், வளைகுடா பகுதிகளின் அகதிகளின் தலைவிதிகள் போன்ற உணர்வுகளை உள்ளடக்கிய ஒன்றாகும்.

இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்களான திமித்ரி மொரொட்டா, மரியா ரிசா ஆகிய இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. அமைதி, ஜனநாயகத்துக்கான அடிப்படையாக கருத்து சுதந்திரம் இருப்பதை வலியுறுத்தியதாக இருவருக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
நோபர் பரிசு அறிவிக்கப்பட்ட மரியா ரிசா தனது சொந்த நாடான பிலிப்பைன்ஸில் அதிகார துஷ்பிரயோகம், வன்முறை பயன்பாடு மற்றும் வளர்ந்து வரும் சர்வாதிகாரத்தை வெளிப்படுத்துவதற்கு கருத்து சுதந்திரத்தை பத்திரிகையின் மூலம் பயன்படுத்தியவர். புலனாய்வு இதழியலுக்கான டிஜிட்டல் மீடியா நிறுவனம் மூலம் தொடர்ந்து அதிகார துஷ்பிரயோகத்தை எதிர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நோபல் பரிசு பெற்ற மற்றொருவரான திமித்ரி மொரொட்டா பல ஆண்டுகளாக ரஷ்யாவில் பேச்சுச் சுதந்திரத்துக்கு ஆதரவாக நின்றவர். பல சவாலான சூழ்நிலைகளிலும் பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து சுந்ததிரத்துக்கு பக்க பலமாக இருந்தவர். 1993 ஆம் ஆண்டில், அவர் நோவாஜா கெஜெட்டா என்ற சுதந்திர செய்தித்தாளின் (independent newspaper) நிறுவனர்களில் ஒருவராகவும் இருந்தார்.
கடந்த ஆண்டு உலக உணவுத் திட்டத்திற்கு (WFP) அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பசியை ஒழிப்பதற்கான முயற்சிகளுக்காகவும், மோதல்கள் நிறைந்த பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட பங்களித்ததற்காகவும், பசியை ஆயுதமாக பயன்படுத்தி போர்களையும், மோதல்களையும் உருவாக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை தடுக்க முக்கிய சக்தியாக செயல்பட்டதற்காகவும் உலக உணவு திட்டத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் தேர்வுக் குழு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications