கணவன் - குழந்தைகளை பார்க்கவே கூடாது! வடகொரியா பெண்களை சீனாவிற்கு அனுப்பும் கிம் ஜாங் உன்.. பின்னணி

Subscribe to Oneindia Tamil

பியோங்யாங்: வடகொரியாவில் திருமணமாகி கணவன், குழந்தைகளுடன் வசித்து வரும் பெண்கள் தற்போது புதிய சித்ரவதையை அனுபவித்து வருகின்றனர். குடும்பத்தை பிரிந்து 3 ஆண்டு முதல் 5 ஆண்டு வரை வாழும் வகையில் அவர்களை கூட்டம் கூட்டமாக கிம் ஜாங் உன் சீனாவிற்கு அனுப்பி வைத்து வரும் நிலையில் அதன் பின்னணி பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

north-korea-married-women-sent-to-china-for-works-upto-3-to-5-years-apart-from-their-husband-and-chi

வடகொரியாவின் அதிபராக கிம் ஜாங் உன் உள்ளார். இவர் சர்வாதிகாரியாக செயல்பட்டு வருகிறார். பொதுமக்கள் எந்த மாதிரியான சிகை அலங்காரம் செய்ய வேண்டும் என்பது முதல் எந்த சேனல் பார்க்க வேண்டும் என்பது வரை கிம் ஜாங் உன் தான் நிர்ணயம் செய்கிறார்.

அதேபோல் வெளிநாட்டினர் வடகொரியாவிற்குள் செல்வதும், வடகொரியா மக்கள் வெளிநாட்டுக்கு செல்வதற்கும் கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. இப்படி பல்வேறு இன்னல்களை அதிபர் கிம் ஜாங் உன் ஆட்சியில் அந்த நாட்டு மக்கள் அனுபவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. வடகொரியாவில் வசிக்கும் திருமணமான பெண்கள் நூதனமான சித்ரவதை ஒன்றை அனுபவித்து வருகின்றனராம். திருமணமாகி குழந்தைகள் பெற்றெடுத்த பெண்கள் குடும்பத்தை பிரிந்து சீனாவிற்கு சென்று 3 முதல் 5 ஆண்டுகள் வரை பணியாற்ற வேண்டும் என்ற நடைமுறை கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறதாம்.

வடகொரியா மீது கடும் பொருளாதார தடைகள் உள்ளன. குறிப்பாக கடந்த 2017 டிசம்பர் மாதத்தில் வடகொரியாவிற்கு எதிராக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் முக்கிய தீர்மானமாக 2397 நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின்படி ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் அனைத்து உறுப்பு நாடுகளும் வடகொரியாவின் தொழிலாளர்களை வேலையில் இருந்து நீக்கி 2019ம் ஆண்டின் இறுதிக்குள் அவர்களின் நாட்டிற்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. வடகொரியாவிற்கு கிடைக்கும் அந்நிய செலவாணியை தடுக்கும் வகையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது வடகொரியாவிற்கு பிரச்சனையாக மாறியது. அந்நிய செலவாணி கையிருப்பு சரிய தொடங்கியது. அந்நிய செலவாணி கையில் இருந்தால் மட்டுமே பிற நாடுகளில் இருந்து பொருட்களை வாங்க முடியும். இதனால் வடகொரியா புதிய பிரச்சனையை எதிர்கொள்ள தொடங்கியது. இந்நிலையில் தான் தற்போது தற்போது ஒரே மாதத்தில் சுமார் 10,000 பெண்களை வடகொரியா சீனாவிற்கு வேலைக்கு அனுப்பியுள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் திருமணமாகி கணவன், குழந்தைகளுடன் வசித்து வந்தவர்கள்.

வடகொரியாவை எடுத்து கொண்டால் டு ரஷ்யா, சீனாவுடன் மட்டுமே நெருக்கமான நட்பு நாடாக செயல்பட்டு வருகிறது. வடகொரியாவின் அந்நிய செலாவணி கையிருப்புக்கு சீனா தான் உதவி செய்து வருகிறது. இதற்கு கைமாறாக திருமணமாகாத பெண்களை அவ்வப்போது சீனாவில் உள்ள ஆயத்த ஆடை மற்றும் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் பணியாற்ற வடகொரியா அனுப்பியது.

சீனாவின் ஜில்லின் மாகாணத்தில் உள்ள தொழிற்சாலையில் வடகொரியா பெண்கள் பணியாற்றி வருகின்றனர். ஆனால் தற்போது திருமணமாகி குழந்தைகள் பெற்றெடுத்து 40 வயதில் இருக்கும் பெண்கள் அதிகமாக அனுப்பி வைக்கப்படுகின்றனர். இவர்கள் கட்டாயமாக 3 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை தங்களின் கணவர், குழந்தைகளை பிரிந்து சீனாவில் பணியாற்ற வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் சீனாவிற்கு சென்றவுடன் அவர்கள் பாஸ்போர்ட்டுகளை ஒப்படைக்க வேண்டும்.

இதனை சீனாவின் 'டெய்லி என்கே' எனும் ஊடகம் உறுதி செய்துள்ளது. இப்படி குடும்பத்தை பிரிந்து வாழும் பெண்கள் மனஉளைச்சலை எதிர்கொண்டு வருகின்றனர். சீனாவிற்கு திருமணமாகாத பெண்களுக்கு பதில் திருமணமான பெண்களை அனுப்புவதை கிம் ஜாங் உன் திட்டமிட்டே செய்துள்ளதாக கூறப்படுகிறது.

திருமணமாகாத பெண்களை சீனாவிற்கு அனுப்பினால் அவர்கள் சித்ரவதையை மனதில் வைத்து வேறு நாட்டுக்கு செல்லலாம். ஆனால் திருமணமான பெண்களை அனுப்புவதன் மூலம் அவர்களால் வேறு நாட்டுக்கு செல்ல முடியாது.

தங்களின் கணவர், குழந்தைகள் வடகொரியாவில் இருப்பதால் அவர்கள் எப்படியும் தாய் நாட்டுக்கு திரும்பி வந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தான் இந்த மாற்றத்தை கிம் ஜாங் உன் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள கணவர், குழந்தைகளை பிணைக்கைதிகள் போல் வைத்து பெண்களை சீனாவிற்கு பணிக்கு அனுப்பி வைக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+