மொத்த அமெரிக்காவும் எங்க விரலுக்கு கீழதான்.. கொக்கரிக்கும் கிம் ஜாங் உன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பியாங்யாங்: அமெரிக்காவின் அனைத்துப் பகுதிகளையும் எங்களால் தாக்க முடியும் என்று வட கொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் உன் கூறியுள்ளார். தங்களது ஏவுகணைகளின் இலக்குக்குள் அமெரிக்காவை கொண்டு வந்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவை குறி வைத்து ஏகப்பட்ட சேட்டைகளை செய்து கொண்டிருக்கிறது வட கொரியா. அதில் ஒன்றாக ஏவுகணைகளை அது பலப்படுத்தி வருகிறது. நேற்று கண்டம் விட்டு கண்டம் பாயும் அதி நவீன ஏவுகணையை அது பரிசோதித்தது. அது வெற்றி பெற்றுள்ளதாக கிம் கூறியுள்ளார்.

வெள்ளிக்கிழமை நடந்த இந்த சோதனை குறித்து கிம் கூறுகையில், எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் ஏவும் வகையில் எங்களது ஏவுகணைகள் தயார் நிலையில் உள்ளன. அமெரிக்காவின் அனைத்துப் பகுதிகளையும் தற்போது எங்களால் தாக்க முடியும்.

சோதனைகள் வெற்றி

சோதனைகள் வெற்றி

எங்களது சோதனைகள் வெற்றி பெற்றுள்ளன. இதற்காக பாடுபட்ட அனைவரையும் பாராட்டுகிறேன். இந்த சோதனைகள் எனக்கு திருப்தியை அளித்துள்ளன என்று கூறியுள்ளார் கிம்.

2வது சோதனை

2வது சோதனை

இந்த மாதத்தில் நடந்த 2வது கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை இது. இதன் மூலம் அமெரிக்காவுக்கு வட கொரியா பகிரங்கமாகவே சவால் விட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு விடப்பட்ட சவாலாகவும் இது பார்க்கப்படுகிறது.

அதெல்லாம் கப்சா

அதெல்லாம் கப்சா

ஆனால் டிரம்ப் இதை நிராகரித்துள்ளார். வட கொரிய சோதனைகள் வெற்றி பெறவில்லை. உலகத்தை அச்சுறுத்தியே வாழப் பார்க்கிறது வட கொரியா. வட கொரியாவை மேலும் மேலும் பலவீனப்படுத்தி வருகிறார் கிம். தனது மக்களை பட்டினியில் போட்டுக் கொண்டிருக்கிறார்.

நாங்க ரெடி

நாங்க ரெடி

அமெரிக்க மக்களையும், மண்ணையும், தோழமை நாடுகளையும் காக்கத் தேவையான நடவடிக்கைகளை அமெரிக்க அரசு எடுக்கும். அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றார் டிரம்ப்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
North Korean president Kim Jong Un has said that "All US" have come under their missile range with the latest testing of ICBM.
Please Wait while comments are loading...