For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"ஒண்டி" எலிக்காக.. 5 மணி நேரம் தாமதமான நார்வே விமானம்!

Google Oneindia Tamil News

ஆஸ்லோ: நார்வே நாட்டின் விமானம் ஒன்றினை எலி ஒன்று பாடாய் படுத்தியதால் 5 மணி நேரம் தாமதமாக புறப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நார்வே நாட்டில் உள்ள ஆஸ்லோ நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க்குக்கு பயணிகள் விமானம் புறப்பட்டது.

அப்போது விமானி அறையில் எலி ஒன்று ஓடியதை பைலட் கண்டுபிடித்தார். உடனே விமானம் நிறுத்தப்பட்டது.

Norway flight delayed for five hours after pilots discovered a MOUSE inside the cockpit

எலியுடன் ஓடிப் பிடித்து விளையாட்டு:

எலியை பிடிப்பதற்கு பாதுகாவலர்கள் முயற்சித்தனர். அது அங்கும், இங்கும் ஓடி அவர்களை அலைக்கழித்தது.

5 மணி நேரம் அழைக்கழிப்பு:

சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு எலி அவர்களிடம் பிடிபட்டது. இதனால் விமானம் 5 மணி நேரம் தாமதமாக நியூயார்க் புறப்பட்டு சென்றது.

கடித்துக் குதற வாய்ப்பு:

அதுவரை பயணிகள் அங்கேயே அமர்ந்து இருந்தனர். விமானத்தில் எலி இருந்தால் அதில் எந்திர பகுதிக்குள் சென்று ஒயர்களை கடித்து சேதப்படுத்தும் வாய்ப்பு உண்டு.

விபத்துக்குள்ளாகும் நிலை:

அப்போது விமானம் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படலாம். இதை தடுக்கவே ஒருவழியாக எலியை பிடித்த பிறகே விமானம் புறப்பட அனுமதிக்கப்பட்டது.

கணிப்பொறி வாங்கும் கையோடு கூடவே ஒரு எலிப்பொறியையும் வாங்கி விட வேண்டும் போல!

English summary
One small mouse caused a five hour delay on a flight from Norway to the US. Norwegian Air Shuttle, already plagued.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X