For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாம் கண்டுபிடித்த அன்னிய கிரகங்களின் எண்ணிக்கை 1000ஐத் தொடப் போகிறதாம்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: மனித வாசனையே இல்லாத அன்னிய உலகங்களைக் கண்டுபிடிக்க நாம் ஆரம்பித்து 20 வருடங்களாகி விட்டன. இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள கிரகங்களின் எண்ணிக்கை விரைவில் ஆயிரத்தைத் தொடவுள்ளது. அது சில நாட்களில் தெரியலாம் அல்லது சில வாரங்களில் தெரியலாம் என்று வி்ஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மலைக்க வைக்கும் விஷயம்தான் விஞ்ஞானம். அதை விட ஆச்சரியமானது விண்வெளியியல். உலகத்தை கீழே பார்ப்பதை விட சற்று மேலே நிமிர்ந்து பாருங்கள்.. எத்தனை எத்தனை ஆச்சரியங்கள், அற்புதங்கள், அமர்க்களங்கள் நமது அண்டவெளியில் கொட்டிக் கிடக்கின்றன தெரியுமா...

நம்மைப் போலவே யாராச்சும் எங்கேயோவது இருக்கிறார்களா என்பதை அறியும் ஆய்வுகள் பல வருடங்களாகவே நடந்து வருகின்றன. அதிலும் நம்மைப் போன்ற கிரகங்கள் வேறு உள்ளதா என்பதை அறியும் கண்டுபிடிப்புகள் 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கின. இது நாள் வரை 900க்கும் மேற்பட்ட கிரகங்களை உலக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு இப்போது 1000ஐத் தொடவுள்ளதாம்.

900 அந்நிய கிரகங்கள்

900 அந்நிய கிரகங்கள்

புதிய கிரகங்கள் தொடர்பான கண்டுபிடிப்புகளை ஐந்து தகவல் தொகுப்புகளாக வகுத்துள்ளனர். அதில் நான்கு தகவல் தொகுப்புகளின் கணக்குப்படி நமது உலகுக்கு வெளியே 900 புதிய உலகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளாக கூறப்படுகிறது.

சரியான எண்ணிக்கை 986

சரியான எண்ணிக்கை 986

அதேசமயம், இரண்டு தகவல் தொகுப்புகளின் கணக்குப்படி, இதுவரை 986 புதிய உலகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளன.

விரைவில் 1000மாவது உலகம்

விரைவில் 1000மாவது உலகம்

இன்னும் சில வாரங்களில் 1000மாவது உலகத்தின் கண்டுபிடிப்பு குறித்த தகவல் வெளியாகலாம் என்றும் செய்திகள் கூறுகின்றன.

92ல் கண்டுபிடிக்கப்பட்ட 2 கிரகங்கள்

92ல் கண்டுபிடிக்கப்பட்ட 2 கிரகங்கள்

1992ம் ஆண்டு முதல் முறையாக 2 கிரகங்களை விஞ்ஞானிகள் க ண்டுபிடித்தனர். அதில் ஒன்று பல்சார் அல்லது நியூட்ரான் நட்சத்திரத்தை சுற்றி வருவது தெரிய வந்தது. இந்த பல்சாரானது, பூமியிலிருந்து 1000 ஒளி ஆண்டுகளுக்கு அப்பாலான தொலைவில் உள்ளது.

கெப்ளர்தான் நிறைய கண்டுபிடித்தது

கெப்ளர்தான் நிறைய கண்டுபிடித்தது

நாசாவின் கெப்ளர் விண்வெளி தொலைநோக்கிதான் பெரும்பாலான புதிய கிரகங்களைக் கண்டுபிடித்த பெருமைக்குரியதாகும்.

3588 புதிய விஷயங்களைக் கண்டுபிடித்த கெப்ளர்

3588 புதிய விஷயங்களைக் கண்டுபிடித்த கெப்ளர்

கெப்ளர் தொலைநோக்கியானது, 3588 பூமிக்கு அப்பால் உள்ள புதிய விஷயங்களை நமக்கு அடையாளம் காட்டி அசத்தியுள்ளது.

160 பில்லியன் உலகங்கள் இருக்கிறதாம்

160 பில்லியன் உலகங்கள் இருக்கிறதாம்

ஆயிரம் உலகங்கள் குறித்துத்தான் நாம் இப்போது பேசிக் கொண்டிருக்கிறோம். ஆஐனால் நமது பால்வழிப் பாதையில் கிட்டத்தட்ட 160 பில்லியன் புதிய உலகங்கள் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் ஆச்சரியப்படுத்துகின்றனர்.

எங்கேயாச்சும் தண்ணீர், காத்து நல்லதா இருந்தா சொல்லுங்கப்பா... பொல்லூஷன் மற்றும் பொலிடீசியன்களால் பூமி ரொம்பவே நாறிப் போய்க் கிடக்கு... இடத்தை மாத்தனும்.

English summary
Astronomers are closing in on 1,000th alien planet to be discovered, just twenty years after spotting the first world beyond our solar system. Four of the five main databases that catalogue the discoveries of exoplanets now list more than 900 confirmed alien worlds, and two of them puts the tally at 986. Therefore, the 1,000th exoplanet may be announced in a matter of days or weeks, SPACE.com reported.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X