For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மருத்துவக் காப்பீடு தாக்கம்... சரிந்து வரும் ஒபாமா செல்வாக்கு: அதிர்ச்சித் தகவல்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: ஓபாமா கேர் மருத்துவக் காப்பீடு விஷயத்தால் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அமெரிக்க அதிபர் ஒபாமாவின் செல்வாக்கு சரிந்துள்ளதாக சமீபத்திய கருத்துக் கணிப்புத் தெரிவித்துள்ளது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

தொடர்ந்து இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டவர், ஜனநாயக கட்சியைச் சார்ந்த பராக் ஒபாமா (வயது 52). ஒபாமாவின் தற்போதைய செல்வாக்கு நிலவரம் எப்படி என்பது குறித்து அங்குள்ள குயின்னிபியாக் பல்கலைக்கழகம் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தியது. அதில், சமீப காலமாக ஒபாமாவின் செல்வாக்கு சரிவு கண்டு வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துக்கணிப்பு....

கருத்துக்கணிப்பு....

கடந்த 6ந் தேதி தொடங்கி 11ந் தேதி வரை நடத்தப் பட்ட இந்தக் கருத்துக் கணிப்பில் சுமார் 2,545 பதிவு செய்த அமெரிக்க வாக்காளர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். இந்த கருத்துக்கணிப்பின் முடிவில், இதுவரை இல்லாத அளவுக்கு ஒபாமாவின் செல்வாக்கு தடாலடியாக சரிவு கண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

புஷ் சரிவை ஒத்தது....

புஷ் சரிவை ஒத்தது....

கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 54 சதவீதம் பேர் ஒபாமாவின் பணிகளை ஏற்கவில்லையாம். 39 சதவீதம் பேர் மட்டுமே ஒபாமாவின் பணிகளில் திருப்தி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒபாமாவின் இந்தச் சரிவு, இதே காலக்கட்டத்தில் முன்னாள் அதிபரும், குடியரசு கட்சி தலைவருமான ஜார்ஜ் புஷ் கண்ட சரிவுக்கு சமமாக அமைந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடரும் சரிவு....

தொடரும் சரிவு....

அடுத்தக் கட்டமாக கடந்த அக்டோபர் மாதம் 1ந் தேதி ஒரு கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப் பட்டது. அதில், ஒபாமாவுக்கு எதிராக 49 சதவீதம் பேரும், ஆதரவாக 45 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்திருந்ததன் மூலம், ஒரே மாதத்தில் சரிவு மேலும் அதிகரித்து உள்ளது தெரிய வந்துள்ளது.

தேனிலவு காலம்....

தேனிலவு காலம்....

கருத்துக்கணிப்பினை நடத்திய குயின்னிபியாக் பல்கலைக்கழகத்தின் ஓட்டுப்பதிவு இன்ஸ்டிடியூட்டின் துணை இயக்குனர் டிம் மல்லாய் இது குறித்துக் கூறுகையில், ‘பிற அனைத்து புதிய ஜனாதிபதிகளைப் போலவே ஒபாமாவும் அமெரிக்க வாக்காளர்களிடம் தேனிலவு காலத்தை பெற்றிருந்தார். அதனால்தான் அவரை 50 சதவீதத்துக்கும் மேலான வாக்காளர்கள் ஏற்றிருந்தனர். இப்போது நிலைமை மாறிவிட்டது. இதுவரை 40 சதவீதத்துக்கும் மேலான மக்களின் ஆதரவை ஒபாமா பெற்றிருந்தார். இப்போதுதான் முதல் முறையாக அது 39 சதவீதத்துக்கு வந்துள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.

பெண்களின் ஆதரவு....

பெண்களின் ஆதரவு....

இந்தக் கருத்துக்கணிப்பின் மூலம் ஒபாமாவுக்கு பெண்களிடத்திலும் செல்வாக்கு சரிந்துள்ளது உறுதியாகியுள்ளதாம். ஒபாமாவுக்கு 41 சதவீதம் பேர் ஆதரவாகவும், 51 சதவீதம் பேர் எதிராகவும் கருத்து கூறி உள்ளனர்.

மக்களின் அவநம்பிக்கை....

மக்களின் அவநம்பிக்கை....

ஒபாமா கேர் என்னும் காப்பீடு திட்டத்தை ஒபாமாவால் செயல்படுத்த முடியாமல் போய்விட்டதே அவருக்கு பின்னடைவை தேடித்தந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒபாமா கேர் காப்பீடு திட்டத்தை ஒபாமா நிறைவேற்றுவாரா என்பதில் அமெரிக்க மக்களிடம் அவநம்பிக்கை நிலவுவதையே கருத்துக்கணிப்பு எதிரொலித்துள்ளது.

ஒபாமாவுக்கு எதிராக....

ஒபாமாவுக்கு எதிராக....

அமெரிக்க மக்கள் தற்போது தாங்கள் வைத்துள்ள காப்பீட்டு திட்டங்களை அவர்கள் விரும்பினால் தொடரலாம் என்று ஒபாமா கூறியது, அவருக்கு எதிராக அமெரிக்க மக்களை திரும்ப வைத்துள்ளதாகவும் இந்தக் கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளதாம்.

English summary
President Obama has reached his lowest approval rating in any Quinnipiac University national poll since being elected president, with 39 percent of registered voters now approving of his job performance and 54 percent disapproving.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X