For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்திய வம்சாவளி பெண் ஷமினா சிங்கிற்கு முக்கிய பதவி அளித்த அமெரிக்க அதிபர் ஒபாமா

By Siva
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷமினா சிங் என்ற தொழில் அதிபருக்கு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா முக்கிய பதவி வழங்கியுள்ளார்.

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அந்நாட்டில் வாழும் இந்திய வம்சாவளியினர் பலருக்கு முக்கிய அரசு பதவிகளை அளித்துள்ளார். இந்நிலையில் ஏமன் நாட்டுக்கான அமெரிக்க தூதர் உள்பட முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டவர்கள் குறித்த அறிவிப்பை ஒபாமா நேற்று வெளியிட்டார்.

Obama nominates Indian-American to key post

அப்போது அவர் கூறுகையில்,

திறமை வாய்ந்த இவர்கள் அரசு பொறுப்புகளில் பணியாற்ற வருவது எனக்கு கௌரவம். அவர்களுடன் பணியாற்ற ஆவலுடன் உள்ளேன் என்றார்.

ஏமனுக்கான அமெரிக்க தூதராக மேத்யூ ஹெச். டியூயல்லர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்திய வம்சாவளி தொழில் அதிபரான ஷமினா சிங்
தேசிய சமுதாய சேவை கார்ப்பரேஷனின் நிர்வாக குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஷமினா முன்னதாக ஆசிய அமெரிக்கர்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசனைக் குழுவின் எக்சிகியூட்டிவ் டைரக்டராக இருந்துள்ளார். இது தவிர அவர் நைகி, சிட்டி குழுமம் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களில் முக்கிய பதவிகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
US President Barack Obama has nominated Indian-American businesswoman Shamina Singh to a key administration post. Singh has been nominated as the member of the Board of Directors of the Corporation for National and Community Service.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X