மகாத்மா காந்தியின் வழியை பின்பற்றுங்கள்: அல் கொய்தாவினருக்கு உத்தரவிட்ட ஒசாமா
லண்டன்: அல் கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடன் 1993ம் ஆண்டு தீவிரவாதிகள் மத்தியில் பேசுகையில் மகாத்மா காந்தியை மேற்கோள் காட்டி
பேசியுள்ளது தெரிய வந்துள்ளது.
2001ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் தீவிரவாதிகளை குறிவைத்ததும் அல் கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடன் கந்தஹாரில் இருந்து தப்பியோடினார். ஆப்கானிஸ்தானில் இருந்த அல் கொய்தா தீவிரவாதிகள் பலர் அவசர, அவசரமாக தங்கள் இருப்பிடங்களை காலி செய்துவிட்டு ஓடினர்.

அப்போது அவர்கள் இருந்த இடம் ஒன்றில் இருந்து 1,500 கேசட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கேசட்டுகள் பல கைகள் மாறி சிஎன்என் கேமராமேனுக்கு கிடைத்தது. இதையடுத்து மசாசுசெட்ஸில் உள்ள வில்லியம்ஸ் கல்லூரியில் ஆப்கான் ஊடக ப்ராஜெக்ட் செய்த பிளாக் மில்லருக்கு அந்த கேசட்டுகள் கிடைத்தன. அவர் ஆப்கானிஸ்தான் பற்றி எழுதிய புத்தகத்தில் அந்த கேசட்டுகளில் உள்ள பேச்சுகள் பற்றி எழுதியுள்ளார்.
1960களில் இருந்து 2001ம் ஆண்டு வரை ஒசாமா உள்ளிட்ட பலர் பேசிய பேச்சுகள் அந்த கேசட்டுகளில் இருந்தன. ஒசாமா முதன்முதலாக 1987ம் ஆண்டு பேசியுள்ளார்.
1993ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட கேசட்டில் ஒசாமா தீவிரவாதிகளிடம் கூறுகையில்,
அமெரிக்க தயாரிப்புகளை புறக்கணியுங்கள். இந்துவான மகாத்மா காந்தி வெளிநாட்டு பொருட்களை புறக்கணிக்கும் போரை துவங்கிய பிறகு இங்கிலாந்து தனது மாபெரும் காலனியில் இருந்து வெளியேறியது என்றார்.
ஒரு கேசட்டில் ஒபாமா நியூயார்க்கின் பெயரை குறிப்பிடாமல் தாக்குதல் நடத்தப் போகும் நம் சகோதரர்களுக்கு ஆண்டவன் வெற்றி அளிப்பானாக என தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications