For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாகிஸ்தான் தேர்தலில் முறைகேடா? முடங்கியது தேர்தல் ஆணைய இணைய பக்கம்.. என்ன நடக்கிறது?

பாகிஸ்தான் தேர்தலில் முறைகேடு நடந்து இருப்பதாக புகார் எழுந்து இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    பாகிஸ்தான் தேர்தலில் முடங்கியது தேர்தல் ஆணையம் இணையதளம்- வீடியோ

    இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தேர்தலில் முறைகேடு நடந்து இருப்பதாக புகார் எழுந்து இருக்கிறது. இந்த பிரச்சனைக்கு இடையில் பாகிஸ்தானின் தேர்தல் ஆணைய இணையதள பக்கம் முடக்கப்பட்டு இருக்கிறது.

    பாகிஸ்தானில் இம்ரான் கானின் பிடிஐ கட்சி 113 இடங்களுடன் முன்னிலை வகிக்கிறது. அந்நாட்டின் புதிய பிரதமராக இம்ரான் கான் பதவியேற்க இருக்கிறார்.

    Pakistan Election Result: Official internet page of EC down amidst foul cry

    பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்து, தற்போது வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டு இருக்கிறது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 272 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இதில் தனிப்பெரும்பான்மை பெற 137 பேர் தேவை. இதனால் இம்ரான் கான் பிரதமராவது உறுதியாகியுள்ளது.

    இந்த நிலையில் பாகிஸ்தான் தேர்தலில் முறைகேடு நடந்து இருப்பதாக புகார் எழுந்து இருக்கிறது. இம்ரான் கானுக்கு ஆதரவாக முடிவுகள் மாற்றப்பட்டு இருப்பதாக புகார் வந்து இருக்கிறது. இது அங்கு தேர்தலில் களத்தில் பெரிய பிரச்சனையை உருவாக்கி உள்ளது.

    இம்ரான் கானுக்கு அந்நாட்டு ராணுவம் ஆதரவு அளிக்கிறது. இதனால் ராணுவத்தின் உதவியுடன் அவர் வெற்றி பெற்று இருக்கிறார் என்று புகார் எழுந்து இருக்கிறது. அமெரிக்காவும் இந்த புகாரை வைத்து இருக்கிறது.

    மேலும் பாகிஸ்தானின் உளவுத்துறை, ஐஎஸ்ஐ அவரின் வெற்றிக்கு பின் பெரிய அளவில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் தற்போது பாகிஸ்தானின் தேர்தல் ஆணைய இணையதள பக்கம் முடக்கப்பட்டு இருக்கிறது.

    இதற்கு என்ன காரணம் என்று தெரிவிக்கப்படவில்லை. ஆனால் இன்னும் தேர்தல் முடிவுகள் அங்கே வெளியாகாமல் இருக்கிறது. இதனால் அங்கு பெரிய அளவில் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

    English summary
    Pakistan Election Result: Official internet page of EC down amidst foul cry opponent parties.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X