For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாடாளுமன்றம் வெளியே குவிந்த போலீஸ் வேன்! இரவோடு இரவாக ஹெலிகாப்டரில் பறந்த இம்ரான் கான்! என்ன நடந்தது

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்த இம்ரான் கான் பிரதமர் பதவியை இழந்துள்ளார். இதனால் அவர் ஹெலிகாப்டரில் அவசரமாக வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.

Recommended Video

    Pakistan-ல் நள்ளிரவில் நடந்த சம்பவம்.. Imran Khan-ஐ வளைத்த ராணுவம்.. என்ன நடந்தது?

    பாகிஸ்தானில் கடைசி நேரம் வரை நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடக்குமா என்ற சந்தேகம் நிலவியது. உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி நேற்று இரவு 12 மணிக்குள் அங்கு நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு இருக்க வேண்டும்.

    ஆனால் 11 மணி தாண்டியும் அங்கு வாக்கெடுப்பு நடத்தப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வந்தது. இதனால் உச்ச நீதிமன்றம் இந்த விஷயத்தில் நேரடியாக தலையிட்டது.

     ”இம்ரான் கானுடன் எப்போதும் இருப்பேன்” உறுதியளித்து பதவி விலகிய பாகிஸ்தான் சபாநாயகர் ஆசாத் ”இம்ரான் கானுடன் எப்போதும் இருப்பேன்” உறுதியளித்து பதவி விலகிய பாகிஸ்தான் சபாநாயகர் ஆசாத்

    பாகிஸ்தான்

    பாகிஸ்தான்

    அதன்படி அங்கு நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடக்கவில்லை என்றால் உச்ச நீதிமன்றம் இரவே விசாரணை நடத்த ரெடியாகி இருந்தது. இரவு நாங்கள் விசாரணை நடத்த தயார் என்று கோர்ட்டும் அறிவித்தது. தலைமை நீதிபதி உமர் அதா பண்டியல், நீதிபதி முனீப் அக்தர், நீதிபதி ஐஜாசுல் அஹ்சன், நீதிபதி மசார் ஆலம் மற்றும் நீதிபதி ஜமால் கான் மண்டோகேல் ஆகியோர் தலைமையிலான அமர்வு கோர்ட்டில் தயாராக காத்து இருந்தது.

    இம்ரான் கான்

    இம்ரான் கான்

    ஆனால் சரியாக 12 மணி ஆகும் சில நிமிடங்களுக்கு முன் அங்கு நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் 2 நிமிடம் அவை ஒத்திவைக்கப்பட்டு பின்னர் இன்றைய கணக்குப்படி அவை தொடங்கி வாக்கெடுப்பு நடந்தது. எங்கே அங்கு சட்டசபை சபாநாயகர் மீண்டும் தீர்மானத்தை தள்ளி வைக்க போகிறாரோ என்ற அச்சம் காரணமாக போலீஸ் வேன் வெளியே குவிக்கப்பட்டு இருந்தது.

     சபாநாயகர்

    சபாநாயகர்

    சபாநாயகர், துணை சபாநாயகர், ஆளும் கட்சியினர் ஏதாவது அசம்பாவிதத்தில் ஈடுபட்டால் அவர்களை கைது செய்ய தயார் நிலையில் போலீஸ் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு முன்பாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் சபாநாயகர் அசாத் குவைசர், துணை சபாநாயகர் குவாஸிம் கான் இருவரும் ராஜினாமா செய்தனர். இதையடுத்து சட்டப்படி எதிர்க்கட்சி கூட்டணியின் தலைவர் ஆயாஸ் சாதிக் அங்கு சபாநாயகராக பதவி ஏற்று நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நடத்தி வைத்தார்.

    வாக்கெடுப்பு

    வாக்கெடுப்பு

    இதையடுத்து நடந்த வாக்கெடுப்பில் இம்ரான் கான் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் தோல்வி அடைந்தார். அங்கு மொத்தம் 342 எம்பிக்கள் உள்ளனர். இங்கு பெரும்பான்மை பெற 172 எம்பிக்கள் தேவை. ஆனால் இம்ரான் கானின் தெஹ்ரிக் கட்சிக்கு 155 எம்பிக்கள் மட்டுமே உள்ளனர் என்பதால் இம்ரான் கான் பிரதமர் பதவியை இழந்தார். எதிர்க்கட்சி கூட்டணிக்கு 174 எம்பிக்கள் ஆதரவு வழங்கினர்.

    பறந்தார்

    பறந்தார்


    இதையடுத்து இம்ரான் கான் இரவோடு இரவாக தன்னுடைய அலுவலகத்தில் இருந்து பானி காலாவில் இருக்கும் தன்னுடைய வீட்டிற்கு புறப்பட்டார். தனி ஹெலிகாப்டர் ஒன்றில் இவர் புறப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. இவர் தனது வீட்டில் இருந்தும் வேறு எங்காவது வெளியேற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானில் விமான நிலையங்கள் உயர் பாதுகாப்பு பணிகளில் இறங்கி உள்ளன.

    சிக்கல் மேல் சிக்கல்

    சிக்கல் மேல் சிக்கல்

    அங்கு அரசு அதிகாரிங்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் யாரும் வெளிநாடு செல்ல அனுமதி இல்லை. என்ஓசி இல்லாமல் யாரையும் வெளியே அனுப்ப கூடாது ராணுவம் சார்பாக உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இம்ரான் கான் வெளிநாடு தப்பி செல்வதை தடுக்கும் பொருட்டு இப்படி செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அங்கு இம்ரான் கான் கைது செய்யப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூறிய நிலையில், எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சிக்கு வருவதால் அவர் கைது செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன.

    கைதா?

    கைதா?

    அதேபோல் அங்கு இர்மான் கான், முன்னாள் அமைச்சர்கள் ஷா முகமது குரேஷி, பவாத் சவுத்திரி, சபாநாயகர், துணை சபாநாயகர் ஆகியோருக்கு எதிராகவும் உயர் நீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் இவர்கள் வெளிநாடு தப்பி செல்வதை தடுக்கும் வகையில் இவர்களை செக்கிங் லிஸ்டில் போட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மனு தாக்கல் செய்துள்ளனர். இதனால் இம்ரான் கானுக்கு எதிராக கைது நடவடிக்கைகள் நடக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

    English summary
    Pakistan Imran Khan reportedly left to his house in helicopter after loosing PM post. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்த இம்ரான் கான் பிரதமர் பதவியை இழந்துள்ளார்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X