For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தாவூத் இப்ராகிம் குறித்த மோடியின் பேச்சுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு

By Mathi
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமை பாகிஸ்தானில் இருந்து நாடு கடத்துவோம் என்று பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறியுள்ளதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் பதுங்கி இருப்பதாக உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறியிருந்தார். இதனை கடுமையாக விமர்சித்த மோடி, பின்லேடனுடன் அமெரிக்கா என்ன பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டா இருந்தது? தாவூத் இப்ராகிமை மீடியாக்களிடம் பேசிக் கொண்டிருப்பதன் மூலம் பிடித்துவிட முடியாது? அமெரிக்கா இப்படியாக பிரஸ் மீட் நடத்திக் கொண்டிருந்தது என்று காட்டமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

Pakistan minister criticises Modi's 'provocative' remarks on Dawood

அத்துடன் தாம் நாட்டின் பிரதமரானால் தாவூத் இப்ராகிமை இந்தியாவுக்கு கொண்டு வருவேன் என்றும் மோடி கூறியிருந்தார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் செளத்ரி நிசார் அலி கான், இப்படி அறிக்கை வெளியிடுவதற்கு முன்பு தாவூத் எங்கு இருக்கிறார் என்பதை மோடி தெரிந்து கொள்ள வேண்டும். அப்படியில்லாமல் தாவூத்தை கொண்டுவருவேன் என்றெல்லாம் பேசுவது ஆத்திரமூட்டக் கூடியது.

இப்படியெல்லாம் பேசினால் அச்சப்படும் அளவுக்கு பாகிஸ்தான் ஒன்றும் பலவீனமான நாடு அல்ல என்றார்.

English summary
Criticising Narendra Modi's recent comments on underworld don Dawood Ibrahim as "provocative", Pakistan has claimed that if the BJP leader becomes India's Prime Minister he would "destabilise" regional peace.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X