For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் நிறைவேறிய இந்து திருமண மசோதா!

By Karthikeyan
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: பத்து மாத கால தொடர் விவாதங்களுக்கு பிறகு பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் கீழ்சபையில் இந்து திருமண மசோதா திங்கள்கிழமை நிறைவேறியது. இதன் மூலம் இந்து சிறுபான்மை தம்பதியர் தங்களது திருமணத்தை சட்டப்பூர்வமாக பதிவு செய்து கொள்ள முடியும்.

பாகிஸ்தான் மக்கள் தொகையில் 1.6 சதவீதம் பேர் இந்துக்கள். நாடு சுதந்திரம் அடைந்த நாள் முதல், அவர்களுக்கு என தனியாக திருமண பதிவு சட்டங்கள் எதுவும் இல்லாமல் இருந்து வந்தது. இதன் மூலம் அவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வந்தனர்.

 Pakistan passes Hindu marriage bill

இந்நிலையில் பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் கீழ்சபை இந்து திருமண மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதாவை செனட் சபையும் தாமதமின்றி விரைவில் நிறைவேற்றும். இதன் மூலம் இந்து தம்பதியர் தங்களது திருமணத்தை சட்டப்பூர்வமாக பதிவு செய்து கொள்ள முடியும். இதன்மூலம் இந்து பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும். பாகிஸ்தான் பாராளுமன்ற வரலாற்றில் இந்த சம்பவம் ஒரு சிறப்பான தருணமாக பார்க்கப்படுகிறது.

English summary
Pakistan's lower house of Parliament has passed a landmark bill giving its small Hindu minority the right to register marriages.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X