பாகிஸ்தானில் இருந்து சவுதி.. சீக்ரெட்டாக விமானத்தில் பறக்கும் மேட்டர்.. உற்று பார்க்கும் உலக நாடுகள்
இஸ்லாமாபாத்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், சவுதி அரேபியாவின் பாதுகாப்பை வலுப்படுத்த பாகிஸ்தான் கூடுதல் ராணுவ உதவிகளை வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏவுகணைகள், ராக்கெட்டுகள், வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்கள் உள்ளிட்ட ராணுவ உபகரணங்களை பாகிஸ்தான் அனுப்பியுள்ள நிலையில், கூடுதல் பாகிஸ்தான் வீரர்களும் சவுதிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
நேட்டோ பாதுகாப்பு கூட்டணியை போலவே இஸ்லாமிய நாடுகளுக்கான ஒரு அமைப்பை உருவாக்கும் முயற்சியில் பாகிஸ்தான் இறங்கியுள்ளது. முதற்கட்டமாக சவுதி மற்றும் துருக்கி ஆகிய நாடுகளை சேர்த்து பாதுகாப்பு மெக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தை போட்டுள்ளது.

சவுதி
இப்போது சவுதி மீதான ஹவுதி படைகளின் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான்- துருக்கி நாடுகள் தக்க நேரத்தில் உதவவில்லை என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதன் பிறகே அவை உதவிகளை ஆரம்பித்தன. ஏவுகணைகள், ராக்கெட்டுகள், வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்கள் முதற்கட்டமாக சவுதிக்கு அனுப்பப்பட்டன.
இரு நாடுகளுக்கும் இடையே கடந்த 2025 செப்டம்பரில் கையெழுத்தான ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இந்த உதவிகள் வழங்கப்படுவதாக பாகிஸ்தான் தரப்பு தெரிவிக்கிறது. இதற்கிடையே இப்போது கூடுதல் பாகிஸ்தான் வீரர்களும் சவுதிக்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இதுவரை எந்த ஆயுதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.. எவ்வளவு வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.. கூடுதலாக எத்தனை வீரர்கள் செல்லவுள்ளனர் என்பது உள்ளிட்ட தகவல்கள் இல்லை.
பாகிஸ்தான்
இதுவரை வான் பாதுகாப்பு அமைப்புகள், ஏவுகணைகள், ராக்கெட்டுகள் மற்றும் ட்ரோன்களை சவுதிக்கு பாகிஸ்தான் அனுப்பியுள்ளது. சவுதி அரேபியாவின் முக்கிய நகரங்கள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த உள்கட்டமைப்புகளை வான்வழி தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பதே இந்த ஆயுதங்களின் நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தான் வீரர்கள் சிறிய எண்ணிக்கையில் தொடர்ந்து சவுதி அரேபியாவுக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. பாகிஸ்தான் விமானப்படையின் விமானங்கள் மற்றும் ராணுவ சரக்கு விமானங்கள் மூலமாகவும் ஆயுதங்கள் கொண்டு செல்லப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உதவிகள்
பாகிஸ்தான் விமானப்படைக்குச் சொந்தமான IL-78 வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானமும் சவுதிக்கு சென்றுள்ளது. எனினும், அந்த விமானத்தின் எதற்காக அங்கே அனுப்பப்பட்டுள்ளது என்பது குறித்த விவரம் வெளியாகவில்லை. ஏமனில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தான் இப்போது சவுதிக்கு தொல்லை கொடுத்து வருகிறார்கள். இதனால் சவுதியின் வர்த்தகம், விமான சேவை உள்ளிட்டவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், சவுதியின் வான் பாதுகாப்பை வலுப்படுத்த பாகிஸ்தானின் உதவி முக்கியத்துவம் பெற்றுள்ளது.
2025 செப்டம்பரில் கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளில் ஏதேனும் ஒன்றுக்கு எதிரான தாக்குதல், அது இரு நாடுகளுக்கும் எதிரான தாக்குதலாக கருதப்படும். இதன் காரணமாகவே பாகிஸ்தான் இப்போது தொடர்ந்து உதவிகளை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதுபோல உதவிகளை செய்யும் அதேநேரம் ஏமன் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதையும் பாகிஸ்தான் வலியுறுத்தி வருகிறது.
முத்தரப்பு ஒப்பந்தம்
இந்த முத்தரப்பு ஒப்பந்தம் சர்வதேச அளவில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் சவுதியிடம் நிதி கொட்டி கிடக்கிறது. துருக்கியிடம் அதிநவீன ஆயுதங்களை தயாரிக்கும் தொழில்நுட்பம் இருக்கிறது. பாகிஸ்தானிடம் அடுத்து அணு ஆயுதம் திறன் உள்ளது. இந்த மூன்று நாடுகளும் ஒரே நேர்கோட்டில் வந்துள்ளது தான் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தன. அதேநேரம் இதில் மற்ற நாடுகள் இதுவரை இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




Click it and Unblock the Notifications
