Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தால் மக்கள் கடும் கோபம்.. வெடித்த போராட்டம்.. பெரு நாட்டில் ஊரடங்கு

Subscribe to Oneindia Tamil

லிமா: பெருவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள், உணவு, உரம் மீதான விலை உயர்வால் அந்நாட்டு அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த போராட்டம் வன்முறையானதால் பெரு அதிபர் பெட்ரோ காஸ்டிலோ தலைநகர் லிமாவில் ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதனால் கச்சா எண்ணெய் விலை உச்சத்தை தொட்டு வருகின்றன. இது விலை உயர்வு பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர்கள் மீதும் எதிரொலிக்கின்றன.

இந்தியா உள்பட பல நாடுகளில் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. எரிவாயு சிலிண்டர் விலையும் அதிகரித்து வருகிறது. இதற்கு பெரு நாடும் விதிவிலக்கல்ல.

பெருவில் விலை உயர்வு

பெருவில் விலை உயர்வு

பெரு நாட்டில் கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர், உணவு பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்றன. மேலும்,
பொட்டாஷ், அம்மோனியா, யூரியா உள்ளிட்ட விவசாய உரங்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளன. பெரு நாடானது ரஷ்யாவில் இருந்து தான் உரங்களை இறக்குமதி செய்கிறது. தற்போது உக்ரைன் போருக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது கடும் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதனால் பெரு நாட்டில் உரத்தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உச்சம் தொட்டுள்ளது.

பொதுமக்கள் அதிருப்தி

பொதுமக்கள் அதிருப்தி

இதனால் விவசாயிகள் உரம் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். மேலும் கச்சா எண்ணெய் மீதான விலையேற்றம் பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர்களின் விலையை அதிகப்படுத்தி உள்ளன. இதனால் தானாகவே உணவு பொருட்களின் விலை எகிறியுள்ளன. இதனால் விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

 பணவீக்கம் எவ்வளவு

பணவீக்கம் எவ்வளவு

இதற்கிடையே எரிபொருள் மீதான வரி விகிதங்களை குறைக்க பரிசீலனை செய்வதாக அரசு அறிவித்தது.ஆனால் பல நாடுகளை போல பெரு நாட்டிலும் பணவீக்கம் அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்தில் பணவீக்கம் 26 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் கூறியபடி வரி விகிதங்கள், விலையேற்றத்தை அரசால் கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது.

போராட்டங்கள்

போராட்டங்கள்

இதற்கிடையே விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் எனக்கூறி கடந்த 2 வாரமாக பெரு நாட்டில் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வந்தன. தற்போது 2 நாட்களாக நாட்டில் தன்னெழுச்சியாக பொதுமக்கள் திரண்டு அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டம் தீவிரமடைந்து வன்முறையாக மாறியது. இதுவரை 4 பேர் இறந்த நிலையில் நேற்று போராட்டக்காரர்கள் சுங்கச்சாவடிகளை சூறையாடி தீவைத்து எரித்தனர். இதுதவிர தெற்கு நகரமான இகா அருகே போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.

ஊரடங்கு அமல்

ஊரடங்கு அமல்

இதனால் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது என்பது பெரு நாட்டு அரசாங்கத்துக்கு கடும் சவாலாக உள்ளது. இந்நிலையில் நேற்று பெரு அதிபர் பெட்ரோ காஸ்டிலோ அமைச்சரவை கூட்டம் நடத்தினார். அதில் போராட்டத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி நேற்று இரவு அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர், ‛'அனைத்து மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஏப்ரல் 5ம் தேதி அதிகாலை 2 மணி முதல் நள்ளிரவு 11.59 மணி வரை ஊரடங்கு அமலாக உள்ளது. இந்த நேரத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது'' என கூறினார்.

அதிபரின் ஆதரவு குறைவு

அதிபரின் ஆதரவு குறைவு

பெரு நாட்டில் கிராமப்புற ஏழைகளின் அமோக ஆதரவுடன் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இடதுசாரி அமைப்பின் பெட்ரோ காஸ்டிலோ அதிபரானார். பள்ளி ஆசிரியரான இவர் விவசாயமும் செய்து வந்தார். இந்நிலையில் தான் விவசாயிகளே அவருக்கு எதிராக திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதை சமாளிக்க முடியாமல் அவர் திணறும் நிலையில் தான் நாட்டு மக்களிடம் அவருக்கு இருந்த வரவேற்பு படிப்படியாக குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இலங்கையை போல் போராட்டம்

இலங்கையை போல் போராட்டம்

தற்போது உலகில் உள்ள பல நாடுகளில் விலைவாசி உயர்வு என்பது பொதுமக்களின் பட்ஜெட்டில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் போராட்டங்கள் நடத்திய நிலையில் அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு பெட்ரோல், டீசல் பொருட்களின் விலை உயர்வை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் அவசர நிலை பிரகடனத்துக்கு நடுவே ஊரடங்கையும் அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்தார். இந்நிலையில் தான் பெரு நாட்டிலும் விலைவாசி உயர்வுக்கு எதிராக பொதுமக்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+