For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மலாலாவின் நோபல் பரிசுக்கு தாலிபான் பேய்கள் பதிலாய் தந்த துப்பாக்கி தோட்டாக்கள்!

Google Oneindia Tamil News

பெஷாவர்: பாகிஸ்தான் பெஷாவர் நகரில் பள்ளி குழந்தைகள் மீதான தாலிபான் தாக்குதலுக்கான காரணங்களில் மலாலாவிற்கு கிடைத்த நோபல் பரிசிற்கு பழிவாங்கும் நடவடிக்கையும் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் பெஷாவர் நகரில் நடைபெற்ற பள்ளிக் குழந்தைகளின் மீதான தாலிபான்களின் கொலை வெறி தாக்குதலுக்கு இளம் சமூக ஆர்வலரான மலாலா யூசுப் சாய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Peshawar school attack: Taliban's 'revenge' for Malala Yousafzai's Nobel Peace Prize

மலாலா யூசும் சாய்... பெண் குழந்தைகளின் உரிமைக்காக போராடிய "குற்றத்திற்காக" கடந்த 2012 ஆம் வருடம் அக்டோபர் 9 ஆம் தேதி பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த போது தாலிபான் தீவிரவாதியால் துப்பாக்கியால் தலையில் சுடப்பட்டு மீண்டு வந்தவர்.

நேற்று நடைபெற்றுள்ள பெஷாவர் பள்ளிக் குழந்தைகள் மீதான தீவிரவாதத் தாக்குதலே மலாலாவிற்கு அமைதிக்காக வழங்கப்பட்டுள்ள நோபல் பரிசு விழாவிற்கு பழிவாங்கும் சம்பவம்தான் என்று பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர்.

அகமது ரசீத் என்ற ராணுவ அதிகாரி இதுகுறித்து தெரிவித்த போது, "பல்வேறு காரணங்களுக்காக நடைபெற்ற இத்தாக்குதலில், ஒரு காரணமாக விளங்குவது மலாலவிற்கு கிடைத்த நோபர் பரிசும்தான்" என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வருத்தம் தெரிவித்துள்ள மலாலா, "என்னுடைய இதயத்தையே நொறுங்கச் செய்யும் அளவிற்கு இந்த சம்பவம் என்னை உலுக்கி உள்ளது. இது ரத்தத்தினை உறையச் செய்யும் ஒரு கொடுமையான சம்பவம் ஆகும்.

அப்பாவியான குழந்தைகளுக்கான பள்ளிக் கூடம் வன்முறையைக் காட்டுவதற்கான இடமல்ல. இந்த படுபாதகச் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடுமையான சட்டத்தினை அரசு அளிக்க வேண்டும்.

நானும், உலக அளவில் பல லட்சக் கணக்கான மக்களும், படுகொலை செய்யப்பட்ட குழந்தைகளுக்காகவும், சகோதர, சகோதரிகளுக்காகவும் வருத்தம் தெரிவிக்கின்றோம். ஆனால், எங்களை என்றுமே வீழ்த்த முடியாது" என்று வருத்தம் தொனிக்க தெரிவித்துள்ளார்.

English summary
The Taliban has killed dozens of children at a Peshawar school in a revenge mission for Pakistani schoolgirl activist Malala Yousafzai being awarded the 2014 Nobel Peace Prize.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X