வேக்சின் போடாதவர்கள் குறி! ரெடியாகும் தனி லிஸ்ட்.. அடுத்து அரெஸ்ட் தான்! அதிரடியில் இறங்கிய அதிபர்
மணிலா: பிலிப்பைன்ஸ் நாடு வேக்சின் செலுத்த மறுப்பவர்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், இது குறித்து தனியாக லிஸ்ட் ஒன்றும் தயாராகி வருகிறது.
கடந்த 2 ஆண்டுகளாகவே உலகின் அனைத்து நாடுகளும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வல்லரசு நாடுகள் கூட கொரோனாவை எதிர்கொள்ளத் திணறி வருகிறது.
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா முதல் அலையை ஏற்படுத்தியது என்றால், ஆல்பா, டெல்டா, பீட்டா கொரோனா வகைகள் அடுத்தடுத்த அலைகளை ஏற்படுத்தின.

கொரோனா
இப்போது ஓமிக்ரான் பரவல் உலக நாடுகளை அலறவிட்டு வருகிறது. தற்போதைய சூழலில் வேக்சின் மட்டுமே கொரோனாவில் இருந்து நம்மைப் பாதுகாக்கும் ஒரே ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது. வேக்சின் எடுத்துக் கொண்டவர்களுக்கும் கொரோனா ஏற்படும் என்றாலும் கூட, உயிரிழப்புகளும் மிகப் பெரியளவில் குறைந்துள்ளது. இதனால் உலகின் பல நாடுகளும் வேக்சின் பணிகளிலேயே தீவிர முன்னுரிமை அளித்துச் செயல்பட்டு வருகிறது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பூஸ்டர் பணிகளும் தொடங்கப்பட்டு விட்டன.

பிலிபைன்ஸ்
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான பிலிபைன்ஸ் நாட்டில் வேக்சின் பணிகள் கடந்த சில மாதங்களாகவே தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே தீவிர வேக்சின் ஆதரவாளராக அறியப்படுகிறார். முன்னதாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேக்சின் செலுத்த விரும்பாத நபர்கள் பிலிபைன்ஸ் நாட்டில் இருக்கத் தேவையில்லை என்றும் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறிவிடலாம் என்றும் அந்நாட்டின் அதிபர் அறிவித்திருந்தார்.

கட்டுப்பாடுகள்
அதேபோல அங்கு வேக்சின் போடாத மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. அங்கு வேக்சின் போடாத மக்கள் பொது போக்குவரத்தைப் பயன்படுத்தப் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள போதிலும், அந்நாட்டின் அதிபர் இதற்கு பின்வாங்குவதாகத் தெரியவில்லை. இப்போது அடுத்த லெவலுக்கு சென்று வேக்சின் போடாத மக்கள் அத்தியாவசிய தேவைகளைத் தாண்டி, தேவையில்லாமல் வெளியே போகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரெடியாகும் லிஸ்ட்
அரசின் இந்த உத்தரவைப் பின்பற்றாமல் வேக்சின் போடாமல் வெளியே சுற்றும் நபர்களைக் கைது செய்யவும் அந்நாட்டின் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே அறிவித்துள்ளார். பிலிபைன்ஸ் நாட்டில் உள்ள மக்களின் நலன் கருதியே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே அங்குள்ள கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று, அங்குள்ளவர்கள் வேக்சின் போட்டுள்ளனரா என்று லிஸ்ட் தயாரிக்கவும் அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

அடுத்து அரெஸ்ட்
விரைவில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் இந்த உத்தரவின்படி, இனி சுகாதார அதிகாரிகள் அங்குள்ள 42,046 கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று லிஸ்ட் எடுக்க வேண்டும். அந்த லிஸ்டில் உள்ள வேக்சின் போடாதவர் தீவிரமாகக் கண்காணிக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் தேவையின்றி வெளியே சுற்றுவது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களைக் கைது செய்யவும் அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக அந்நாட்டின் குற்றவியல் சட்டத்திலும் தேவையான திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா
ஓமிக்ரான் பரவலுக்குப் பின்னர், பிலிபைன்ஸ் நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அங்கு ஒரே நாளில் சுமார் 34,021 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ள நிலையில், பாசிட்டிவ் விகிதமும் 47.9%ஆக உயர்ந்துள்ளது. அங்கு கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 53,000 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது. முன்னதாக கடந்த 2020 இதே அதிபர் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே, வேக்சின் போடாதவர்களைச் சுட்டுத்தள்ளுவேன் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications