For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அட வைரமே.. ஜஸ்ட் ஒரு சின்ன கல்லுதான்... ரூ.480 கோடிக்கு விற்பனை.. வியந்து பார்க்கும் உலகம்

Google Oneindia Tamil News

ஹாங்காங்: சோதேபிஸ் நிறுவனத்தால் ஏலம் விடப்பட்ட இளஞ்சிவப்பு நிற வைரம் ஒன்று சுமார் ரூ.480 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.

வைரங்கள் மீதான மோகம் மனித இனம் அதனை கண்டு பிடித்ததிலிருந்து தற்போது வரை தொடர்ந்து வருகிறது. குறிப்பாக ஆசிய வைரங்கள் மீது உலகம் முழுவதும் ஈர்ப்பு இருந்து வருகிறது.

அந்த வரிசையில், இப்போது இந்த வைரம் அதிக தொகையில் விற்பனையாகியுள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2017ல் இதே போன்ற வைரம் ஒன்று சுமார் ரூ.590 கோடிக்கு ஏலம் விடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கோகினூர் வைரம்.. பூரி ஜெகன்நாதருக்கு தான் சொந்தம்.. பறித்த பிரிட்டிஷ்காரர்கள் பற்றிய பரபர கடிதம் கோகினூர் வைரம்.. பூரி ஜெகன்நாதருக்கு தான் சொந்தம்.. பறித்த பிரிட்டிஷ்காரர்கள் பற்றிய பரபர கடிதம்

 வைரம்

வைரம்

வைரங்கள் குறித்த நம்பிக்கைகள் காலம் காலமாக இருந்து வருகிறது. பண்டைய காலத்தில் போரில் பங்கேற்பவர்கள் வைரம் அணிவதை வழக்கமாக கொண்டிருந்தனர். ஆனால் இவ்வாறு எல்லோருக்கும் வைரம் எளிதில் கிடைத்துவிடாது. வைரம் அணிவதன் மூலம் தங்களுக்கு அதீத தைரியமும், வலிமையும் கிடைப்பதாக அவர்கள் நம்பினர். இப்படியாக வரலாறு முழுவதும் வைரம் முக்கியத்துவம் பெற்றதாக இருந்துள்ளது. இந்தியாவிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட கோஹினூர் வைரம் தற்போது வரை இங்கிலாந்தில்தான் இருக்கிறது.

 ரூ.480 கோடி

ரூ.480 கோடி

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த வைரங்கள், பூமிக்கடியில் 90-100 கிமீ ஆழத்திலிருந்து அகழ்ந்தெடுக்கப்படுகிறது. வைரங்கள் கிடைப்பதே அரிது எனில் சிவப்பு, பச்சை உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும் வைரம் இதைவிட அரிது. இந்நிலையில் ஹாங்காங்கில் நடைபெற்ற ஏலத்தில் 11.15 காரட் இளஞ்சிவப்பு நிற வைரம் ஒன்று சுமார் ரூ.480 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. உலக அளவில் இதுவரை அதிக தொகையில் விற்பனையான வைரங்களில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது இந்த இளஞ்சிவப்பு நிற வைரம்.

 ரூ.590 கோடி

ரூ.590 கோடி

புளோரிடாவின் போகா ரேட்டனில் உள்ள ஒருவர் இந்த வைரத்தை ஏலத்தில் விட்டுள்ளார். இதன் மதிப்பு வெறும் ரூ.173 கோடிதான். ஆனால் சோதேபிஸ் எனப்படும் ஏல நிறுவனம் இதனை ஏலம் விட்டதில் ரூ.480 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. இதே போல இதற்கு முன்னர் கடந்த 2017ல் இதே போன்று CTF பிங்க் ஸ்டார் என்று அழைக்கப்பட்ட வைரம் ஒன்று சுமார் ரூ.590 கோடிக்கு ஏலம் விடப்பட்டிருந்தது. உலக அளவில் அதிக தொக்கு ஏலம் விடப்பட்ட வைரம் இதுதான்.

 ஆசிய வைரம்

ஆசிய வைரம்

இதனையடுத்து இந்த இளஞ்சிவப்பு நிற வைரம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த CTF பிங்க் ஸ்டார் எனப்படும் 23.6 காரட் வைரம் 1947ம் ஆண்டு பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் திருமணத்திற்காக அவருக்கு பரிசாக வழங்கப்பட்டது. வைரங்கள் இவ்வாறு அதிக விலைக்கு விற்பனையாகியுள்ள நிலையில், ஆசிய வைரத்திற்கான தேவை அதிகரித்துள்ளதாக வைர விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் தொடக்கத்தில் அதிக அளவு வைரங்கள் கிடைக்கப்பட்டது என்றாலும், தற்போது உலகம் முழுவதும் இருந்து உற்பத்தியாகும் வைரங்களில் 96% ஆப்பிரிக்காவிலிருந்துதான் பெறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A pink diamond auctioned by Sotheby's sold for around Rs 480 crore. The fascination with diamonds has been around since mankind discovered them. Asian diamonds in particular are attracting worldwide attention. In that line, this diamond is currently selling for the highest amount. It is noteworthy that earlier in 2017, a similar diamond was auctioned for around Rs.590 crore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X