For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டின்னருக்கு போன பிரதமர் மோடி.. திரும்பி பார்த்தால் ஜி ஜின்பிங்! ஜி20 மாநாட்டில் சர்ப்ரைஸ் மீட்டிங்

Google Oneindia Tamil News

பாலி: இந்தோனேசியாவில் ஜி20 உச்சி மாநாடு நடந்து வரும் நிலையில், இன்று யாரும் எதிர்பார்க்காத முக்கிய சந்திப்பு ஒன்று நடந்துள்ளது.

உலகளவில் டாப் 20 பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளின் கூட்டமைப்பு தான் ஜி20 என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜி20 தலைவர்கள் கலந்து கொள்ளும் மாநாடு நடைபெறும்.

இதில் பல முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும். இந்தாண்டு இந்தோனேசியாவில் ஜி20 நாடுகளின் வருடாந்திர உச்சி மாநாடு நடைபெறுகிறது.

 ரணகளமாகிப் போன சென்னை காங். தலைமை அலுவலகம்.. நிர்வாகிகள் கோஷ்டி மோதலால் போலீஸ் குவிப்பு ரணகளமாகிப் போன சென்னை காங். தலைமை அலுவலகம்.. நிர்வாகிகள் கோஷ்டி மோதலால் போலீஸ் குவிப்பு

ஜி20 மாநாடு

ஜி20 மாநாடு

இந்தோனேசியாவின் பாலி நகரில் நடக்கும் இந்த உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் இந்தோனேசியா முகாமிட்டுள்ளனர். இந்தாண்டு பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல விஷயங்கள் ஆலோசிக்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி காணொளி வாயிலாகக் கலந்து கொண்ட நிலையில், ரஷ்ய அதிபர் புதின் இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளார்.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளப் பிரதமர் மோடி நேற்று இந்தோனேசியா புறப்பட்டுச் சென்றார். இன்று காலை தான் பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க அதிபர் பைடன் தேடி வந்து வரவேற்றார். பிற உலக தலைவர்கள் இருந்த போதிலும், அவர்களைத் தாண்டி பிரதமர் நரேந்திர மோடியை மீட் செய்தார். உச்சி மாநாடு தொடங்கும் முன்பு அவர்கள் சில நொடிகள் பேசிக் கொண்டிருந்தனர்.

ஜி ஜின்பிங்

ஜி ஜின்பிங்

இந்த உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பல்வேறு உலக தலைவர்களைச் சந்திக்க உள்ளார். இருப்பினும், பிரதமரின் நிகழ்ச்சி நிரலில் சீன அதிபரைச் சந்திக்கும் திட்டம் எதுவும் இல்லை. இருப்பினும், எதிர்பாராத விதமாக இரு தலைவர்களும் சந்தித்துக் கொண்டு உள்ளனர். இரு நாடுகளுக்கு இடையே தொடர்ந்து எல்லை மோதல்கள் நடந்து வரும் நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த சந்திப்பு நடந்து உள்ளது.

சர்ப்ரைஸ் மீட்டிங்

சர்ப்ரைஸ் மீட்டிங்

இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ வழங்கிய ஜி20 தலைவர்களுக்கான டின்னர் விருந்தில் தான் இந்த சர்ப்ரைஸ் சந்திப்பு நடந்துள்ளது. இது தொடர்பாக வெளியான வீடியோ ஒன்றில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பிரதமர் நரேந்திர மோடியும் கைகளைக் குலுக்கியவாறு பேசிக் கொண்டு இருக்கிறார்கள். இரு தலைவர்களுமே ஜி20 பிரதிநிதிகள் எப்போதும் அணியும் பாரம்பரிய உடைகளை அணிந்து இருந்தனர்.

ஏன் முக்கியம்

ஏன் முக்கியம்

இந்த மீட்டிங் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கல்வான் மோதலுக்கு பின்னர், எல்லையில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. 2020ஆம் ஆண்டிற்குப் பின் இரு நாட்டுத் தலைவர்களும் எந்தவொரு கூட்டத்திலும் சந்திக்கவில்லை. இந்தச் சூழலில் இந்த மீட்டிங் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி நாளை பல்வேறு ஜி20 தலைவர்களைத் தனிப்பட்ட முறையில் சந்திக்க உள்ளார். இருப்பினும் அந்த பட்டியலில் சீனா இல்லை.

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு

கடந்த செப்டம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் உஸ்பெகிஸ்தானில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் இரு நாட்டுத் தலைவர்களும் கலந்து கொண்டனர். அப்போது இரு தலைவர்களும் சந்தித்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அந்த நேரத்தில் இரு நாட்டுத் தலைவர்களும் நேரில் சந்திதுக் கொள்ளவில்லை என்பது நினைவுகூரத்தக்கது.

எல்லை பிரச்சினை

எல்லை பிரச்சினை

எல்லையில் குவிக்கப்பட்ட படைகள் மெல்ல வாபஸ் பெறப்பட்டாலும் கூட இன்னும் அங்கு அமைதி திரும்பவில்லை. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ள உள்ளது. இந்தச் சூழலில் ஜி20 மாநாட்டின் விளிம்பில் பிரதமர் மோடி மற்றும் ஜி ஜின்பிங் இடையே நடந்துள்ள இந்த சிறு சந்திப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

English summary
Prime Minister Narendra Modi and Chinese President Xi Jinping had suprise meetin at G20 dinner: Indonesia G20 meeting latest updates in tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X