வாய்ப்பில்லை.. உக்ரைன் நிறுத்தும் வரை நாங்கள் நிறுத்த மாட்டோம்.. அதிரடி புடின்..அதிகரிக்கும் பதற்றம்

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ : உக்ரைன் தாக்குதலை நிறுத்தும் வரை அந்நாட்டின் மீதான தாக்குதலை ரஷ்யா நிறுத்தாது எனவும், போர் நிறுத்தத்தை மீறி அந்நாடு தான் தாக்குதலை நடத்தியது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா மீது உக்கிரமாக போர் நடத்தி வருகிறது. போரை நிறுத்த நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியை தழுவின. இந்நிலையில், கடந்த 9 நாட்களாக உக்ரைனில் கடுமையான தாக்குதலை நடத்திவந்த ரஷ்யா தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்தது.

மரியுபோலில் இருந்து மனிதாபிமான வழித்தடத்தை உருவாக்கும் முயற்சிகள் இரண்டாவது முறையாக தோல்வியடைந்த நிலையில் தாக்குதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் ரஷ்யாவும் உக்ரைனும் இன்று ஒன்றையொன்று குற்றம்சாட்டின.

அத்துமீறிய உக்ரைன்

அத்துமீறிய உக்ரைன்

உக்ரைனின் நகரங்கள் பல நாட்களாக மின்சாரம், உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் முற்றுகைக்கு உட்பட்டுள்ளது. ரஷ்யப் படைகளைச் சுற்றி வளைத்து சிக்கிய சுமார் 400,000 மக்களை வெளியேற்றும் பணிக்காக தற்காலிக போர்நிறுத்தம் இன்று தொடங்கப்படவிருந்தது. போர் நிறுத்தம் தோல்வியடைந்ததையடுத்து, இரு தரப்பினரும் மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளனர்.

இருதரப்பு புகார்

இருதரப்பு புகார்

உக்ரைன் 24 தொலைக்காட்சியானது ரஷ்யர்கள் நகரின் பாதுகாப்பான பகுதிகளில் ஷெல் தாக்குதல்களைத் தொடர்ந்ததாக கூறியது. இதற்கிடையில்,இண்டர்ஃபாக்ஸ் செய்தி நிறுவனம், டொனட்ஸ்க் பிரிவினைவாத நிர்வாகத்தின் மீது குற்றம் சாட்டியது. உக்ரேனியப் படைகள் வரையறுக்கப்பட்ட போர்நிறுத்தத்தை கடைபிடிக்கத் தவறிவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளது. சுமார் 300 பேர் மட்டுமே நகரை விட்டு வெளியேறியுள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

உதவும் அமெரிக்கா

உதவும் அமெரிக்கா

தெற்கு நகரமான மைகோலைவ் மற்றும் வடக்கில் செர்னிஹிவ் ஆகிய இடங்களில் எல்லைகளை கட்டுப்படுத்துவதற்கு கடுமையான போர்களில் ஈடுபட்டு வருவதாக உக்ரேனிய இராணுவம் தெரிவித்துள்ளது. மரியுபோலைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துவதாக அந்நாட்டு ராணுவம் கூறியுள்ள நிலையில், டொனெட்ஸ்கின் கிழக்குப் பகுதியில் உக்ரேனியப் படைகளின் நடவடிக்கை நடந்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்கப் படைகள் கீவ் அருகே நெருங்கி வருவதாகவும், கீவ்வின் புறநகர்ப் பகுதியில் உள்ள பிலோகோர்டோகாவில், ரஷ்யப் படைகளுக்கு இடையூறாக நிற்கும் கடைசி பாலம் ஒன்றில் உக்ரேனிய துருப்புக்கள் வெடிகுண்டுகளை வைத்துள்ளனர்.

புடின் உறுதி

புடின் உறுதி

உக்ரைன் தாக்குதலை நிறுத்தும் வரை அந்நாட்டின் மீதான தாக்குதலை ரஷ்யா நிறுத்தாது எனவும், போர் நிறுத்தத்தை மீறி அந்நாடு தான் தாக்குதலை நடத்தியது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. "தற்போதைய (உக்ரேனிய) அதிகாரிகள் தாங்கள் செய்வதை தொடர்ந்து செய்தால், உக்ரேனிய மாநிலத்தின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்குகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்" என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் ரஷ்யாவிற்கு எதிரான நிதி உதவி மற்றும் பொருளாதாரத் தடைகள் குறித்து விவாதிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் தொலைபேசியில் பேசியதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இன்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+