இனிமேதான் கவனமா இருக்கனும்! உக்ரைன் மக்களை எச்சரிக்கும் ஜெலன்ஸ்கி! வீரத்தில் பெரிய நாடு என பெருமிதம்
கீவ் : வரவிருக்கும் வாரம் உக்ரைன் மீதான போரில் மிக முக்கியமானதாக இருக்கும் எனவும், ரஷ்யா கொடுமைகள் செய்வதில் பெரிய நாடு என்றால், தீரத்திலும் தைரியத்திலும் உக்ரைன் மிகப்பெரிய நாடாக இருக்கிறது என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் ஆகியுள்ள நிலையில் , ரஷ்ய ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஆனாலும் தலைநகரான கிவ்வை இன்னும் கைப்பற்ற முடியவில்லை.
காரணம் அந்த அளவுக்கு உக்ரைன் ராணுவத்தினரின் எதிர்தாக்குதல் இருப்பதுதான். மிகப்பெரும் வல்லரசு நாடான ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் ராணுவம் மட்டுமல்லாது, பொதுமக்களும் போராடி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைன் போர்
ரஷ்யாவின் செச்சினியா குடியரசின் சக்திவாய்ந்த தலைவரான ரம்ஜான் கதிரோவ், உக்ரைனில் முற்றுகையிடப்பட்ட மரியுபோல் துறைமுகத்தின் மீது மட்டுமல்லாமல் கீவ் மற்றும் பிற உக்ரேனிய நகரங்களிலும் ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தும் என்று கூறினார். "ஒரு தாக்குதல் இருக்கும் ... மரியுபோல் மட்டுமல்ல, பிற இடங்கள், நகரங்கள் மற்றும் கிராமங்கள் மீதும்," என கதிரோவ் தனது டெலிகிராம் சேனலில் வெளியிடப்பட்ட வீடியோவில் கூறினார்.

கீவ்வை கைப்பற்ற தீவிரம்
"லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் ஆகியவ்ற்றை நாங்கள் முதலில் முழுமையாக விடுவிப்போம் ... பின்னர் கீவ் மற்றும் பிற அனைத்து நகரங்களையும் எடுத்துக்கொள்வோம்." என அவர் கூறியுள்ளார். ரஷ்யாவுக்கு உக்ரைனை சுற்றியுள்ள பல நாடுகள் ஆதரவாக உள்ளன. அதே நேரத்தில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆதரவாக இருந்து, ஆயுதங்கள், நிதியுதவி உள்ளிட்டவற்றை அளித்து வருகின்றன. இதனால் தான் ரஷ்யாவுக்கு உக்ரைன் கைப்பற்றுவதில் சிக்கல் நீடிக்கிறது.

முக்கியமான வாரம்
இந்நிலையில் வரவிருக்கும் வாரம் உக்ரைன் மீதான போரில் மிக முக்கியமானதாக இருக்கும் எனவும், ரஷ்யா கொடுமைகள் செய்வதில் பெரிய நாடு என்றால், தீரத்திலும் தைரியத்திலும் உக்ரைன் மிகப்பெரிய நாடாக இருக்கிறது என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி பெருமிதம் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை இரவு தனது நாட்டு மக்களை எச்சரிக்கும் வகையில் வீடியோ மூலம் உரையாற்றிய அவர், வரவிருக்கும் வாரமும் போரில் எந்த ஒரு வாரமும் முக்கியமானதாக இருக்கும். "ரஷ்ய துருப்புக்கள் நமது நாட்டின் கிழக்கில் இன்னும் பெரிய ராணுவ நடவடிக்கைகளை எடுக்கும்" என்று கூறினார்.
Recommended Video

அரக்கர்கள் போல் ரஷ்யா
போர்க் குற்றங்களுக்கான பொறுப்பிலிருந்து ரஷ்யா தப்பிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டிய அவர் , "மக்கள் தங்கள் தவறுகளை ஒப்புக்கொள்ளவும், மன்னிப்பு கேட்கவும், யதார்த்தத்திற்கு ஏற்பவும் கற்றுக்கொள்ளவும் தைரியம் இல்லாதபோது, அவர்கள் அரக்கர்களாக மாறுகிறார்கள். உலகம் அதை புறக்கணிக்கும் போது, அசுரர்கள் உலகமே தங்களுக்கு ஒத்துப்போக வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள். இதையெல்லாம் உக்ரைன் தடுத்து நிறுத்தும்," என்றார். அதாவது ரஷ்யா உலக நாடுகள் தனது பேச்சை கேட்க வேண்டும் என நினைப்பதாகவும், இல்லையேல் அசுரர்கள் போல் செயல்படுவதாக குறிப்பிட்டார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications