இந்தியாவுக்கு சிக்கல்? பாகிஸ்தான் உடன் திடீரென நெருங்கும் ரஷ்யா! குழப்பத்தில் உலக நாடுகள்-என்னாச்சு
மாஸ்கோ: உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவுக்கு அழுத்தம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தனக்கு ஆதரவான நாடுகளை ஒருங்கிணைக்கும் பணிகளில் ரஷ்யா இறங்கி உள்ளது.
Recommended Video
உக்ரைன் மீது கடந்த பிப். இறுதியில் ரஷ்யா முழு வீச்சிலான போரைத் தொடங்கியது. இந்தப் போர் காரணமாக உலகின் பெரும்பாலான நாடுகள் ரஷ்யா மீது மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தன.
இது ரஷ்யாவின் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமா ரஷ்யா தனக்கு ஆதரவான நாடுகளைத் திரட்டும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது.

கடிதங்கள்
இதனிடையே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் பாகிஸ்தானின் புதிய பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பும் இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம் தெரிவித்து கடிதங்களை எழுதி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஷேபாஸ் ஷெரீப் பிரதமர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் இந்த கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இருப்பினும், இரு நாட்டு அரசுகளுமே இந்த கடிதங்களைப் பொதுவெளியில் வெளியிடுவதைத் தவிர்த்துள்ளன என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

கடிதம்
இது தொடர்பாக மூத்த வெளியுறவு அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில்,"ஷெரீப் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து புதின் கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில் அவர் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை ஆழப்படுத்த விரும்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பதில் அளிக்கும் வகையில் பாக். பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் எழுதிய கடிதத்திலும், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்தும் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி உள்ளார்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தான்
முன்னதாக அமெரிக்கா மீது பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சில சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருந்தார். அதாவது தனது ரஷ்ய விவகாரத்தில் தனது நிலைப்பாடு அமெரிக்காவுக்குப் பிடிக்காத காரணத்தினாலே, தனது ஆட்சியை நீக்க அமெரிக்கா விரும்புவதாகத் தொடர்ந்து சாடி வந்தார். இருப்பினும், இம்ரான் கான் இந்த குற்றச்சாட்டுகளை அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்தே வருகிறது. இந்தச் சூழலில் தான் ரஷ்ய மற்றும் பாகிஸ்தான் தலைவர்களுக்கு இடையே இந்த கடித பரிமாற்றம் நடந்துள்ளது.

இம்ரான் கான்
பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக இருந்த இம்ரான் கான், கடந்த பிப் மாதம் ரஷ்யாவுக்குச் சென்றார். அங்கு அவர் ரஷ்ய ஜனாதிபதி புதின் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவது தொடர்பாக அப்போது ஆலோசிக்கப்பட்டது. இம்ரான் கான் மாஸ்கோவில் இருந்த அந்த சமயத்தில் தான், சரியாக உக்ரைன் மீது ரஷ்யா போரை ஆரம்பித்தது. உலக நாடுகள் இம்ரான் கான் மீது கோபம் கொள்ள இது முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

பாக் -ரஷ்யா உறவு
தொடக்கக் காலத்தில் ரஷ்யாவுக்கும் பாகிஸ்தான் நாட்டிற்குமான உறவு சுமுகமாகவே இருந்தது. இருப்பினும், சமீப ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மோசமடைந்தது. பாகிஸ்தான் அமெரிக்கா உடன் நெருக்கம் காட்டியது. இதனால் ரஷ்யா சீனாவை நோக்கி மேலும் நகர்ந்தது. பொருளாதார ரீதியாக மட்டுமின்றி, பாக். நாட்டிற்கு ஆயுதங்களை விற்க ரஷ்யாவும் ஆர்வமாக உள்ளது. கடந்த காலங்களில் இந்தியாவின் எதிர்ப்பு காரணமாக இது தவிர்க்கப்பட்டது.

ஏன் முக்கியம்
இந்தச் சூழலில் தான் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இம்ரான் கான் அரசே ரஷ்யா உடன் நெருக்கம் காட்டி வந்தது. பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கடந்த 1999இல் மாஸ்கோ சென்றார். அதன் பின்னர் சுமார் 23 ஆண்டுகளுக்குப் பின்னர், இம்ரான் கான் ரஷ்யா சென்றது இதையே காட்டுகிறது. ஆனால், பாகிஸ்தான் நாட்டுடன் ரஷ்யா நெருக்கம் காட்டுவது இந்தியாவுக்குச் சிக்கலை ஏற்படுத்துவதாகவே இருக்கும்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications