“கவலை வேண்டாம்.. ரஷ்யா உங்களுக்கு உதவும்” ஈரானுக்கு புதின் வாக்குறுதி!
மாஸ்கோ: ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர், மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது, ரஷ்யா ஈரானுக்கு உதவும் என்று புதின் வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.
ஈரானின் அணு நிலையங்கள் மீது அமெரிக்கா நேரடியாக தாக்குதல் நடத்தியிருப்பது மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்க ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி நேற்று மாஸ்கோ சென்றிருந்தார்.

அவர் இன்று மாலை புதின் மற்றும் ரஷ்யாவின் இதர அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். இந்த ஆலோசனையில்தான் புதின், அமெரிக்காவின் தாக்குதலை நியாயமற்றது என்று கண்டித்துள்ளார். மேலும், ஈரான் மக்களுக்கு உதவ தயாராக இருக்கிறோம் என்றும் புதின் கூறியுள்ளார்.
ஈரான் அணு ஆயுதங்களை தாயாரிக்கிறது என்பதுதான் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் குற்றச்சாட்டு. ஆனால், இதற்கான எந்த ஆதாரமும் கிடையாது. இருப்பினும், புலி வருது, புலி வருது என்று சொல்லிக்கொண்டு ஈரான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் கூட சேர்ந்துக்கொண்டு தற்போது அமெரிக்காவும் தாக்குதலை நடத்தியுள்ளது.
நேற்று அதிகாலை ஈரானின் மூன்று அணு நிலையங்கள் மீது அமெரிக்கா கடுமையான தாக்குதலை நடத்தியது. ஈரான் அணு உலைகள் மலைக்கு கீழ் இருப்பதால், அதை தாக்கி அழிக்க சிறப்பு குண்டுகளை அமெரிக்கா பயன்படுத்தியுள்ளது. GBU-57 என்று அழைக்கப்படும் இந்த குண்டுகள், நிலத்தடியில் 200 மீ ஆழம் வரை உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும். இந்த குண்டுகளை போடுவதற்கு என தனியாக B-2 விமானங்களை அமெரிக்கா பயன்படுத்தியுள்ளது.
இது தவிர, அமெரிக்காவின் கடற்படை கப்பலிலிருந்தும் ஏவுகணைகளை ஏவி தாக்கியுள்ளது. இதில் இரண்டு அணுசக்தி நிலையங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 'ஃபோர்டோ' நிலையம் லேசான பாதிப்புகளை எதிர்கொண்டிருப்பதாகவும் ஈரான் கூறியிருக்கிறது. நேற்று முன்தினம் வரை, வாய் வார்த்தையில் பேசிக்கொண்டிருந்த அமெரிக்கா திடீரென தாக்குதலில் இறங்கியிருந்தது மத்திய கிழக்கில் பதற்றத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது.
இந்த பின்னணியில்தான் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர், ரஷ்ய அதிபர் புதினை நேரில் சந்தித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
குட்டையை குழப்பிய இஸ்ரேல்.. செங்கடலில் உச்சக்கட்ட பதற்றம்! போர் இப்போதைக்கு முடியாது போல! -
இஸ்ரேல் கப்பலை கண்டதும் சுட உத்தரவு.. பாப் அல்-மன்டெப் கண்ட்ரோலில் எடுக்கும் ஹவுதி! -
ஹார்முஸ், பாப் அல்-மண்டெப் இரண்டையும் மூடிய ஈரான்..? மொத்த வர்த்தகமும் முடக்கம்.. உலக நாடுகள் ஷாக் -
ஹார்முஸ் மூடினாலும் கவலையில்லை! பேக்கப் இருக்கு.. 'worst-case' வந்தால்.. ஹர்தீப் சிங் பூரி சொன்ன பதில்! -
டிரம்ப் எச்சரிக்கையை மதிக்காத இஸ்ரேல்.. ஈரான் மீது சரமாரி அட்டாக்.. அமைதி பேச்சுவார்த்தை உடைகிறதா? -
நள்ளிரவில் மீண்டும் வெடித்த போர்.. இஸ்ரேல் மீது ஈரான் சரமாரி ஏவுகணை தாக்குதல்.. போர் நிறுத்தம் காலி? -
இஸ்ரேல் - ஈரான் இடையில் திடீர் போர் நிறுத்தம்! பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அதிரடி அறிவிப்பு! -
ஈரானுக்கு பயணம் வேண்டாம்.. அங்குள்ள இந்தியர்கள் உடனே வெளியேறுங்கள்.. மத்திய அரசு அவசர அறிவுறுத்தல் -
ஈரான் கொடுத்த கடைசி வார்னிங்.. இஸ்ரேல் செயலால் ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளும் பீதி! -
டொனால்ட் டிரம்ப் 'நான்தான் பாஸ்'.. டிரம்ப் சொல்லியும் கேட்காத இஸ்ரேல் நெதன்யாகு.. புதிய தலைவலி! -
ஈரானின் சர்ப்ரைஸ் தாக்குதல்.. ஆடிப்போன இஸ்ரேல் கொடுத்த பதிலடி.. 3 நகரங்களில் மக்கள் அலறல்! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து












Click it and Unblock the Notifications