• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நம்மூரே பரவாயில்லை.. ரஷ்ய அதிபர் தேர்தலில் இளைஞர் வாக்குகளை கவர புதின் செய்த மட்டமான வேலையை பாருங்க

By Veera Kumar
|
  தேர்தலில் இளைஞர்களின் வாக்குகளை கவர புதின் செய்த மட்டமான வேலை- வீடியோ

  மாஸ்கோ: வாக்குச்சாவடிக்கு வாக்காளர்களை வரவைப்பதற்கு நம்மூர் அரசியல்வாதிகள் செய்யும் வேலைகளை தாண்டி மட்டமான வேலைகளை செய்ய ஆரம்பித்துள்ளார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்.

  ஓட்டுக்கு காசு கொடுப்பது, சாராயம் கொடுப்பது, ஏன் டோக்கன் கொடுப்பதை கூட நம்மூரில் பார்த்துவிட்டோம். இதைவிட அசிங்கமான காரியத்தை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் செய்துள்ளார் என பரபரக்கின்றன சர்வதேச ஊடகங்கள்.

  ரஷ்ய அதிபருக்கான தேர்தல் மார்ச் மாதம் 18ம் தேதி நடைபெற உள்ளது.

  மீண்டும் புதின் போட்டி

  மீண்டும் புதின் போட்டி

  இந்த தேர்தலில் ஏற்கனவே 3 முறை அதிபராகிவிட்ட புதின் மீண்டும் போட்டியிடுகிறார். இதையொட்டி கடந்த டிசம்பரிலேயே அவர் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டார். எதிர்த்து போட்டியிட வலுவான நபர்கள் இல்லாத நிலையில், விளாடிமிர் புதின் வெற்றி பெற்று மேலும் 6 வருடங்கள் அதிபராக பதவியில் இருப்பார் என்றே கள நிலவரம் சொல்கிறது.

  வாக்குப்பதிவு அதிகரிப்பு

  வாக்குப்பதிவு அதிகரிப்பு

  இருப்பினும் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் என்பதில் புதின் உறுதியாக உள்ளார். இளைஞர்களை வாக்குச்சாவடிக்கு கொண்டுவந்துவிட்டால் வாக்கு பதிவு அதிகரிக்கும், அதில் பெரும்பாலான வாக்குகள் தனக்கே கிடைக்கும் என்பது புதின் திட்டம். இதையொட்டி, மட்டமான விளம்பர யுக்திகளை புதின் அணி கையில் எடுத்துள்ளதாம்.

  உள்ளாடை போஸ்கள்

  உள்ளாடை போஸ்கள்

  மேக்சிம் என்ற இதழில், பெண் மாடல்கள் உள்ளாடைகளுடன் நிற்கும் புகைப்படங்களை வெளியிட்டு வாக்குச்சாவடிக்கை வாக்களிக்க வாருங்கள் என அழைப்பதை போல விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மேக்சிம் இதழ் ஆசிரியர் அலெக்சாண்டர் மலென்கோவிடம் கேட்டபோது, விளம்பரத்தை யார் போடச்சொல்லி பணம் செலுத்தினார்கள் என்ற தகவலை வெளிியிட முடியாது என கூறிவிட்டார். எனக்கும் முதலில் ஒருமாதிரிதான் இருந்தது. எத்தனையோ சமரசங்களுக்கு நடுவே, இதுவும் ஒரு சமரசம்தானே என விளம்பரத்தை வெளியிட ஒப்புக்கொண்டேன் என்று அவர் கூறியுள்ளார்.

  அடக்கொடுமையே

  அடக்கொடுமையே

  அதேபோல சோஷியல் மீடியாவிலும், வாக்குப்பதிவு மையங்களுக்கு மக்களை ஈர்க்க கவர்ச்சி வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. உள்ளாடைகளுடன் காட்சியளிக்கும் பெண் மாடல் ஒருவர் வாக்குப்பதிவு மையத்திற்குள் நீங்கள் வருவீர்கள் என காத்திருக்கிறேன் என கூறுவதைபோல போல ஒரு வீடியோ சுற்றி வருகிறது. அதே வீடியோவில், வாக்குப்பதிவு இயந்திரம் அருகே நிர்வாணமாக படுத்தபடி உள்ள மாடல் அழகி "எனக்கு உங்கள் ஓட்டு வேண்டும். எனது வாக்குச்சீட்டை அவிழ்க்க உதவுவீர்களா" என இரட்டை அர்த்தம் பொதிந்தபடி கேட்பதை போல எழுத்துக்கள் வீடியோ மீது ஓடுகின்றன. அப்போது அந்த மாடல் தனது பிராவை அவிழ்க்க கையை கொண்டு செல்வதை போலவும் செய்கிறார்.

  வயசுக்கு வரலியா

  வயசுக்கு வரலியா

  இப்படி வீடியோக்களை வெளியிடுவது புதின் டீம்தான் என கூறப்படுகிறது. மற்றொரு வீடியோவில் ஒரு பெண் நைட் கிளப்பில் ஆண் ஒருவரை அழைத்துக்கொண்டு உதட்டு முத்தம் கொடுக்கிறார். அப்போது 18 வயதாகிவிட்டதா என அப்பெண் கேட்கிறார். அந்த ஆணும் ஆமாம் என ஆசையாக கூறுகிறார். உடனே அந்த பெண் "அப்போ இன்று நீ ஓட்டு போட்டியா" என கேட்கிறார். அந்த ஆண் இல்லை என கூற, அப்போ நீ வயதுக்கு வரவில்லை என கூறிவிட்டு, ஆடைகளை சரி செய்துவிட்டு நடையை கட்டிவிடுகிறார் அந்த பெண். ஓட்டு போட்டால்தான் 'மேட்டர்' என்ற பொருள்பட பிரச்சாரம் செய்துள்ளது புதின் டீம்.

  ஓரினச் சேர்க்கைக்கு ரெடியாகுங்கள்

  ஓரினச் சேர்க்கைக்கு ரெடியாகுங்கள்

  இவற்றைவிட மோசமான ஒரு வீடியோவும் புதின் அணியால் சுற்றிவிடப்பட்டுள்ளது. அதில், புதிய அதிபரை தேர்ந்தெடுத்தால், பார்ட்னர் கிடைக்காத ஓரினச் சேர்க்கையாளர்களை உங்கள் வீட்டுக்கு அவர் அனுப்பி வைத்துவிடுவார் என மிரட்டும் தொனியில் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. ஆக மொத்தத்தில் ரஷ்ய அதிபர் தேர்தல் முஸ்தீபுகள், படுமோசமான பிரச்சார யுக்திகளுடன் நடைபெற்றுக்கொண்டுள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

  lok-sabha-home

   
   
   
  English summary
  Vladimir Putin's election supporters are using provocative pictures of female models in underwear in the latest bizarre tactic to fend off apathy in next month's Russian presidential poll.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more