என்னது, அமேசான் நதியில் தங்கமா? சல்லடைகளுடன் தண்ணீரில் குதிக்கும் மக்கள்.. பிரேசிலில் பரபரப்பு
ரியோடி ஜெனீரோ: உலகின் மிகப்பெரிய மழைக்காடுகளில் ஒன்றான அமேசான் காட்டில் உற்பத்தியாகி பல்வேறு நாடுகளை வளமாக்குகிறது அமேசான் நதி.
அமேசான் நதியில் பிரதான கிளை நதியாக மடைரா (madeira) உள்ளது.. பிரேசில் நாட்டின் மிக முக்கிய நீர் ஆதாரமான மடைய்ரா நதி மற்றும் அதன் ஆற்றுப்படுகைகளில் தங்கப் படிமங்கள் அதிக அளவு இருப்பதாக சமீப காலங்களாக இணையத்தில் தகவல் பரவத்தொடங்கியது.
இதையடுத்து கையில் சல்லடையுடன் ஆயிரக்கணக்கானோர் ஆற்றுப்படுகையை முற்றுகையிட்டு சல்லடை போட்டுத் தேடினர்.

தங்க துகள்கள்
ஒரு சிலருக்கு மட்டும் மிகச்சிறிய அளவிலான தங்க துகள்கள் கிடைத்தது. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது. ஆற்றுப்படுகையில் தங்கப்படிமங்கள் மேலும் அதிக அளவு இருக்கலாம் என நினைத்த ஏராளமான சட்டவிரோத சுரங்க நிறுவனங்கள் மிதக்கும் அகழ்வு எந்திரங்களை நதியின் குறுக்கே குவித்துள்ளனர்.

பிரேசில் அரசு
ஏற்கனவே சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக ஆற்றுப்படுகை அச்சுறுத்தல் பட்டியலில் உள்ள நிலையில், தற்போது சட்டவிரோத சுரங்க நிறுவனங்கள் நதியின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள அகழாய்வு இயந்திரங்கள் மூலம் துளையிட்டு தங்கப் படிமங்கள் தேடி வருகின்றனர். சுமார் இரண்டு வாரங்களுக்கும் மேலாக சுரங்க நிறுவனங்கள் தங்கம் உள்ளதா என ஆராய்ந்து வரும் நிலையில் சமூக ஆர்வலர்கள் இதுகுறித்து பிரேசில் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.

பாதிப்பு ஏற்படுகிறது
25 ஆண்டுகளுக்கும் மேலாக அமேசான் மற்றும் அதன் கிளை நதிகளை பாதுகாக்க வேண்டும் என போராடி வரும் சமூக ஆர்வலர்கள், தங்க வேட்டைக்காக செயல்பட்டு வரும் சட்டவிரோத சுரங்க அகழ்வு நிறுவனங்கள் காரணமாக ஆற்றின் சூழல் தன்மை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தடுக்க வேண்டும்
எனவே, வரும் காலங்களில் இதனை தடுக்க தவறினால் பல கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என எச்சரித்துள்ளனர். எது எப்படி போனால் நமக்கென்ன என ஏராளமானோர் ஆற்றங்கரைகளில் குவிந்து தற்போது வரை தங்கம் கிடைக்கும் என தேடி வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications