திடீர் ஆக்சிஜன் தட்டுப்பாடு.. ஆம்புலன்ஸ் பற்றாக்குறை.. உயரும் கொரோனா மரணங்கள்.. பகீர் ரஷ்யா
ரஷ்யாவில் கொரோனா தொற்று பரவல் அதிகமாகி வருகிறது
மாஸ்கோ: ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா மரணங்கள் அதிகரித்து வருவதாக ரஷ்ய டாக்டர்கள் அதிர்ச்சி தகவலை கூறுகிறார்கள்.
ரஷ்யாவில் தினசரி கொரோனா பாதிப்புகள் அதிகமாகி கொண்டே வருகின்றன.. இதையடுத்து, அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது..
அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து வேறு எதற்காகவும் பொதுமக்களுக்கு வீட்டை விட்டு வெளியில் வர அனுமதி இல்லை.. அதேசமயம், ஊதியத்துடன் கூடிய விடுப்பும் தரப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

கவலை
மற்றொரு பக்கம் தடுப்பூசிகளை செலுத்தும் பணி துரிதமாகி வருகிறது.. ஒரே நாளில் 40 ஆயிரம், 50 ஆயிரம் பேர் தொற்றுக்கு ஆளாகி வருவது அந்நாட்டு மக்களை கவலைக்குள்ளாக்கி வருகிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், வரும் நவம்பர் 7ம் தேதி வரை முழு அடைப்பு அமல்படுத்தப்படும் என்று உத்தரவிட்டுள்ள நிலையில், ஊரடங்கும் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

கவலை
இதனிடையே ரஷ்யாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடும் அதிகரித்து வருவதாக அந்நாட்டு டாக்டர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.. கொரோனா மரணங்கள் சமீப நாட்களாக அதிகரித்து வந்தாலும், அதன் உண்மையான தரவுகள் வெளியிடப்படுவதில்லை என்றும், அரசு வெளியிடும் எண்ணிக்கையைவிட, கொரோனா மரணங்கள் மேலும் அதிகமாகவே இங்கு ஏற்படுகின்றன என்றும் ரஷ்ய டாக்டர்கள் கூறுகிறார்கள்.

உயிரிழப்பு
இதில், ஆக்சிஜன் தட்டுப்பாட்டினால் ஏற்படும் மரணங்கள் அதிகம் என்றும், ஆம்புலன்ஸ் தட்டுப்பாடு, மயக்க மருந்து பற்றாக்குறை போன்றவையும் அதிக உயிரிழப்புக்கு காரணமாக அமைந்து வருவதாகவும் அதிர்ச்சியை கிளப்பி விட்டு வருகின்றனர் ரஷ்ய டாக்டர்கள். ரஷ்யாவில் இதுவரை 8554192 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளன.. ரஷ்யாவில் அதிக பாதிப்புக்கு காரணமாக இருப்பது தலைநகர் மாஸ்கோ தான் என்பதால் அங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரமாக கையில் எடுக்கப்பட்டுள்ளன.
Recommended Video

டிஸ்சார்ஜ்
நாட்டிலேயே 239,693 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்றும், 7,381,726 பேர் தொற்றில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் ஆகி சென்றதாகவும் கூறப்படுகிறது.. ரஷ்யாவில் மொத்தம் 14.60 கோடி என்கிற அளவில் மக்கள் தொகை உள்ளது. இதில், 10 லட்சம் பேருக்கு 1,626 பேர் என்ற அளவில் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.. அதாவது, மக்கள் தொகையில் 10 லட்சம் பேருக்கு 58,026 பேர் என்ற அளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications