“ஆயுதத்தை கீழே போட்டா உயிர் பிழைப்பது உறுதி” ரஷ்யா கொடுத்த கடைசி வார்னிங்! உக்ரைனுக்கு பறந்த கடிதம்
கீவ் : உக்ரேனியப் படைகளை உடனடியாக ஆயுதங்களைக் கீழே போடுமாறும், முற்றுகையிடப்பட்ட துறைமுக நகரமான மரியுபோலின் இருக்கும் சில ராணுவ துருப்புகளும் தங்கள் எதிர்ப்பைக் கைவிடுமாறு இறுதி எச்சரிக்கையை ரஷ்யா விடுத்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் 55 நாட்கள் ஆகியிருக்கும் நிலையில் தலைநகர் கீவ்வை ரஷ்யா கைப்பற்றத் தவறினாலும், போரினால் பாதிக்கப்பட்ட நாட்டின் மற்ற பகுதிகளில் இடைவிடாத தாக்குதல் தொடர்கிறது.
முற்றுகையிடப்பட்ட துறைமுக நகரமான மரியுபோலைக் கைப்பற்றுவதில் ரஷ்யா கவனம் செலுத்தும் நிலையில், உக்ரைன் இறுதிவரை போராடுவதாக" உறுதியளித்துள்ளது.

அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி
உக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி முன்னாள் சோவியத் அரசின் கிழக்கு பகுதியில் ரஷ்யா தாக்குதலைத் தொடங்குவதாக அறிவித்ததை அடுத்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் இந்த எச்சரிக்கை வந்துள்ளது. கீவ் அதிகாரிகளை நாங்கள் மீண்டும் ஒருமுறை அழைக்கிறோம் போராளிகளுக்கு அவர்களின் புத்தியில்லாத எதிர்ப்பை நிறுத்துவதற்கு உரிய உத்தரவுகளை வழங்கவும் என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ராணுவத்தினரை காப்பாற்ற வேண்டும்
ஆனால் உக்ரைன் நாட்டின் அதிபர் மற்றும் அதிகாரிகள் தன் நாட்டின் ராணுவத்தினரை காப்பாற்ற வேண்டும் என எந்த முடிவும் எடுக்க மாட்டார்கள், என்பதைப் புரிந்துகொண்டு இந்த முடிவை தானாக முன்வந்து எடுக்கவும் ஆயுதங்களைக் கீழே போடவும் நாங்கள் போராளிகளை அழைக்கிறோம் என ரஷ்யா கூறியுள்ளது. ஆனால் ரஷ்யா விடுத்துள்ள அந்த அறிக்கையில், கிழக்கு உக்ரைனில் புதிய தரைவழித் தாக்குதல் பற்றி நேரடியாகக் குறிப்பிடவில்லை.

பயங்கரமான புதிய குற்றங்கள்
ஆனால், மாஸ்கோவில் "உக்ரைன் ஆட்சியாளர்களால் தயாரிக்கப்பட்ட பயங்கரமான புதிய குற்றங்கள் பற்றிய ஆதாரம்" இருப்பதாக ரஷ்யா எச்சரித்துள்ளது. மரியுபோலின் அசோவ் துறைமுகத்தில் முன்னேறி வரும் ரஷ்யப் படைகளை எதிர்க்கும் உக்ரேனியப் போராளிகள் "பேரழிவுகரமான சூழ்நிலையில்" இருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் மேலும் கூறியது.

உயிர் பிழைப்பது உறுதி
"ரஷ்ய ஆயுதப்படைகள் மீண்டும் தேசியவாத பட்டாலியன்கள் மற்றும் வெளிநாட்டு கூலிப்படைகளுக்கு அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்தவும், நண்பகல் முதல் ஆயுதங்களை கீழே போடவும் ஒரு வாய்ப்பை வழங்குகின்றன" என்று அது கூறியது. "ஆயுதத்தை கீழே போடும் ஒவ்வொருவரும் உயிர் பிழைப்பது உறுதி."என கூறியுள்ளது. ஆனால் வழக்கம் போல் இந்த அறிக்கையையும் உக்ரைன் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை என்றே அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications