Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வீழ்ந்தது கெர்சன்.. உக்ரைனுக்கு மிகப்பெரிய அடி.. துறைமுக நகரத்தை பிடித்த ரஷ்யா.. புடின் பாய்ச்சல்!

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: உக்ரைனின் முக்கிய நகரங்களில் ஒன்றான கெர்சனை இன்று காலை ரஷ்யா பிடித்தது. நகரம் மொத்தத்தையும் ரஷ்யா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.

Recommended Video

    Ukraine-னின் Kherson துறைமுக நகரத்தை பிடித்த Russia | Black Sea | Odessa | Oneindia Tamil

    உக்ரைன் ரஷ்யா இடையில் போர் 7வது நாளை தொட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை காலை உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுப்பதாக அறிவித்தது. 6 நாட்களாக நடந்து வரும் போரில் இதுவரை 6000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    ஆனால் ரஷ்ய தரப்போ தங்கள் பக்கம் 600 பேர் மட்டுமே பலியாகி உள்ளதாக ஒப்புக்கொண்டு உள்ளது. உக்ரைன் அரசு ஐரோப்பாவிற்கு நெருக்கமாகவும், நேட்டோ படைகளுக்கு நெருக்கமாகவும் இருந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது.

    பெர்டியான்ஸ்க்

    பெர்டியான்ஸ்க்

    முன்னதாக பெர்டியான்ஸ்க் என்ற நகரத்தையும் ரஷ்யா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. ரஷ்யா உக்ரைனில் குறி வைத்த பல முக்கிய நகரங்களில் பெர்டியான்ஸ்க், கார்கிவ், கெர்சன் ஆகிய நகரங்களும் அடங்கும். இதில் பெர்டியான்ஸ்க் நகரத்தை நேற்று ரஷ்யா பிடித்தது. இந்த நிலையில்தான் தற்போது உக்ரைனின் முக்கிய நகரங்களில் ஒன்றான கெர்சனை பிடித்தது ரஷ்யா. கெர்சன் ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்குள் சென்றதை உக்ரைன் அரசும் உறுதி செய்தது.

     ரஷ்யா உக்ரைன் போர்

    ரஷ்யா உக்ரைன் போர்

    கெர்சன் என்பது உக்ரைனின் மிகப்பெரிய துறைமுக நகரங்களில் ஒன்று ஆகும். 2014ல் ரஷ்யா கைப்பற்றிய கிரிமியாவை ஒட்டி இருக்கும் நகரம் ஆகும். இங்கு ரஷ்யா ஆதரவு மக்கள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் ரஷ்ய படைகள் இங்கே வந்த போது அந்த படைகளுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இதனால் இங்கு கடந்த 4 நாட்களாக போர் நடைபெற்றது.

    கெர்சன்

    கெர்சன்

    தற்போது ரஷ்யா வசம் இந்த நகரம் சென்றுள்ளது. கெர்சன் நகரத்தை அனைத்து பக்கங்களில் இருந்தும் ரஷ்ய படைகள் சுற்றி வளைத்தது. நேற்று வடக்கு கெர்சன் நகரை பிடித்த ரஷ்ய ராணுவம் இன்று காலை தெற்கு கெர்சன் நகரையும் பிடித்து மொத்தமாக கைப்பற்றியது. கருங்கடலில் கெர்சன் நகரின் இரண்டு பக்கத்திலும் துறைமுகம் இருக்கிறது. இதனால் கெர்சன் ரஷ்யாவிற்கு மிகப்பெரிய அளவில் ராணுவ ரீதியாக உதவ கூடிய பகுதியாகும்.

    எத்தனை பேர்

    எத்தனை பேர்

    2.9 லட்சம் மக்கள் வசிக்க கூடிய முன்னேறிய நகரம் இது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு வார போரில் ரஷ்யா பெரிய அளவில் உக்ரைன் நகரங்களை பிடிக்க முடியாத நிலையில் கெர்சனை பிடித்தது ரஷ்யாவிற்கு பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. இதையடுத்து தற்போது கார்கிவில் போர் நடந்து வருகிறது. அங்கு கடுமையான தாக்குதல்களை ரஷ்யா நடத்தி வருகிறது.

     அடுத்த அட்டாக்

    அடுத்த அட்டாக்

    ஆனால் உக்ரைன் தலைநகர் கீவில் ரஷ்யா இன்னும் முன்னேறவில்லை. அங்கு இன்னும் ரஷ்யா 60 கிமீ தூரத்திற்கு பீரங்கிகளை குவித்து மட்டும் வைத்துள்ளது. இந்த போரில் ரஷ்யா பின் வாங்காது. உலக நாடுகள் பொருளாதார தடைகள் விதித்தாலும் ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தும் என்று அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+