Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்கமாட்டோம்.. ஆனால் ஒரு விஷயம்.. பொடி வைத்து பேசும் ரஷ்யா.. பின்னணி?

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ : நாட்டின் இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டால் மட்டுமே ரஷ்யா அணு ஆயுதங்களை நாடும் எனவும், உக்ரைனுடனான தற்போதைய மோதலின் விளைவாக அல்ல என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் உறுதிபட கூறியுள்ளார்.

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் கடந்த மாதம் பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்கி தற்போது வரை 30 நாட்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது.

உக்ரைன் தலைநகர் கிவ் தவிர, கார்கிவ், மரியுபோல் உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் மீது ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் நாளுக்கு நாள் போர் தீவிரமடைந்து வருகிறது.

உக்ரைன் போர்

உக்ரைன் போர்

உக்ரைன் மீதான போரின் முதற்கட்ட இலக்கை எட்டிவிட்டதாகவும், இனி உக்ரைனின் கிழக்கு பகுதிகளை பாதுகாப்பதில் கவனம் செலுத்தபோவதாகவும் ரஷியா கூறினாலும் இன்னும் அதை செயல்படுத்தவில்லை. மாறாக உக்ரைன் நகரங்களை சுடுகாடுகளாக மாற்றும் மூர்க்கத்தனமான தாக்குதல்களை தொடர்ந்து வருகின்றன. குறிப்பாக துறைமுக நகரமான மரியுபோல் மீதான தாக்குதல்கள் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகின்றன.

பாதுகாப்பு கேள்விக்குறி

பாதுகாப்பு கேள்விக்குறி

மக்கள் நிலைமை, ரஷ்ய படைகளின் தொடர் குண்டு வீச்சால் மரியுபோல் நகரில் உள்ள கட்டிடங்கள் அனைத்தும் சேதமடைந்துள்ள நிலையில் அங்குள்ள மக்களை காப்பாற்றவிடாமல் ரஷ்யா தடுப்பதாகவும், இதனால் அங்குள்ள மக்களின் நிலை அச்சமூட்டும் வகையில் உள்ளதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைன் எதிராக ரஷ்யா, பயோ வெப்பன், இரசாயன ஆயுதங்கள், அணு ஆயுதங்கள் என ஆபத்தான ஆயுதங்களை பயன்படுத்தலாம் எனவும் அச்சமூட்டும் தகவல் வெளியாகின. மக்கள் நிலைமை கேரஷ்ய படைகளின் தொடர் குண்டு வீச்சால் மரியுபோல் நகரில் உள்ள கட்டிடங்கள் அனைத்தும் சேதமடைந்துள்ள நிலையில் அங்குள்ள மக்களை காப்பற்ற விடாமல் ரஷ்யா தடுப்பதாகவும், இதனால் அங்குள்ள மக்களின் நிலை அச்சமூட்டும் வகையில் உள்ளதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைன் எதிராக ரஷ்யா, பயோ வெப்பன், இரசாயன ஆயுதங்கள், அணு ஆயுதங்கள் என ஆபத்தான ஆயுதங்களை பயன்படுத்தலாம் எனவும் அச்சமூட்டும் தகவல் வெளியாகின.

அணு ஆயுத பயன்பாடு

அணு ஆயுத பயன்பாடு

இந்நிலையில் நாட்டின் இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டால் மட்டுமே ரஷ்யா அணு ஆயுதங்களை நாடும் எனவும், உக்ரைனுடனான தற்போதைய மோதலின் விளைவாக அல்ல என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் உறுதிபட கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், உக்ரைனின் செயல்பாடுகளால் ஏற்படும் எந்தவொரு விளைவும் அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவதற்கு ஒரு காரணம் அல்ல" என்ற பெஸ்கோவ், "எங்கள் நாட்டில், மாநிலத்தின் இருப்புக்கு அச்சுறுத்தல் இருக்கும்போது மட்டுமே, நாங்கள் அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம், நாட்டின் மீதான அச்சுறுத்தலை அகற்ற அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் என்பதில் நாங்கள் மிகத் தெளிவாக உள்ளோம் என்றார்.

வாய்ப்பு இல்லை

வாய்ப்பு இல்லை

முன்னதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ரஷ்யாவிற்கு அச்சுறுத்தலாகக் கருதும் நாடுகளுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடும் என கூறியிருந்தார். எமது நாட்டுக்கும் எமது மக்களுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் நாடுகளுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்தக் கூடும் என ரஷ்ய ஜனாதிபதி தனது அறிக்கையில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் ரஷ்யாவின் இந்த கருத்து உண்மையிலேயே கடைபிடிக்கப்படக் கூடியதாக இருந்தால் மூன்றாம் உலகப் போர் மூளும் அபாயம் இருக்காது என உலக அரசியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+