குடிக்கக் கூட தண்ணீர் இல்லை.. தெருவில் இறங்கிய மக்கள்.. அழிவை நோக்கி செல்லும் தென்னாப்பிரிக்கா!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  உலகை உலுக்கும் தண்ணீர் பஞ்சம்... இந்தியாவுக்கும் எச்சரிக்கை- வீடியோ

  கேப்டவுன்: தாய் நகரம், இதுதான் தென்னாபிரிக்க மக்கள் கேப் டவுனிற்கு வைத்து இருக்கும் பெயர். உலகில் இருக்கும் மிக அழகான நகரங்களில் அதுவும் ஒன்று.

  இந்தியா அங்கு கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருப்பதால் அந்த நகரம் தற்போது அடிக்கடி செய்திகளில் வந்து கொண்டு இருக்கிறது. ஆனால் செய்திகளில் இப்படி இடம்பெற அது மட்டும் காரணம் இல்லை.

  இசைக்கலைஞர்கள் அதிகம் இருக்கும் அந்த ஊரில் தற்போது மோசமான தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. தற்போது அந்த நாடு 'டே - ஸீரோ' நிலையை அடைந்து இருக்கிறது.

  டே - ஸீரோ என்றால் என்ன

  டே - ஸீரோ என்பது தண்ணீர் பஞ்சத்தின் அதிகபட்ச நிலையாகும். ஒருநாட்டில் இருக்கும் தண்ணீர் வளமும் பயன்படுத்தப்பட்டு, மீதம் இருக்கும் சேமிப்பு நீர் மட்டுமே ஒரே வழி என்ற நிலை வருவதுதான் டே - ஸீரோ ஆகும்.
  இந்த நிலைதான் தற்போது அங்கு ஏற்பட்டு இருக்கிறது.

  மக்கள் அவதி

  இந்த நிலை வந்தால் மக்கள் மழை வரும் வரை தண்ணீர் கிடைக்கக் காத்து இருக்க வேண்டும். அங்கு இருக்கும் எல்லா வீடுகளிலும் தண்ணீர் நிறுத்தப்பட்டு உள்ளது. எல்லோரும் வீதியில் இறங்கி பொது இடங்களில் தண்ணீர் பிடிக்கிறார்கள். இதைக் கட்டுப்படுத்த போலீசும், ராணுவமும் இருக்கிறது.

  மோசமான கட்டுப்பாடு

  அந்த நகரத்திற்கு தற்போது 600 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் அதில் கால் வாசி கூட இப்போது இல்லை. இதனால் தனி நபர் பயன்படுத்தும் தண்ணீரின் அளவு 87 லிட்டரில் இருந்து 50 ஆகக் குறைக்கப்பட்டு இருக்கிறது. இது குளிக்க, குடிக்க, சமைக்க எல்லாம் சேர்த்துத்தான்.

  காலாவதி ஆகும்

  கடந்த மூன்று வருடமாக அங்குக் கொஞ்சம் கூட மழை இல்லை. இதே நிலையில் தொடர்ந்தால் இந்த மே மாசம் தண்ணீர் மொத்தமாக காலியாகும். சரியாக மே 11ம் தேதி கடைசி நாள் குறிக்கப்பட்டு இருக்கிறது.

  என்ன செய்வார்கள்

  தற்போது கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் அங்குச் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணிகள் முடிந்துவிட்டது. இது தினமும் 2 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொடுக்கும். ஆனால் அதுவும் செயல்பட இன்னும் 60 நாட்கள் ஆகும் எனக் கூறப்பட்டு இருக்கிறது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  South Africa's Cape Town reaches its Day Zero water shortage. Due to this Government cuts water supply fto 75% of homes.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற