"ஜீன் டெஸ்டிங்.." 27% இந்தியர்களுக்கு ஆபத்து?? கொரோனா பற்றிய ஷாக் ஆய்வு முடிவுகள்.. ஏன் முக்கியம்

Subscribe to Oneindia Tamil

வார்சா: கொரோனா உயிரிழப்புகள் குறித்து முக்கிய ஆய்வு முடிவு ஒன்றை போலாந்தை சேர்ந்த ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

Recommended Video

    Vaccine மூலம் கிடைக்கும் பலன்.. அதிகாரிகள் சொன்ன தகவல்

    கடந்த 2 ஆண்டுகளாகவே உலக நாடுகளை ஆட்டிப்படைத்துக் கொண்டிருப்பது கொரோனா தான். இந்த கொரோனாவை கட்டுக்குள் வைத்திருக்க அனைத்து நாடுகளும் திணறி வருகின்றன.

    இது கொரோனா தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால் அதைக் கட்டுக்குள் வைத்திருப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகளில் வைரசால் அதிக பேர் உயிரிழந்துள்ளனர்.

     கொரோனா 2ஆம் அலை

    கொரோனா 2ஆம் அலை

    கொரோனா பரவ தொடங்கி 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது என்றாலும் கூட ஒப்பீட்டளவில் இது புதிய ஒரு வைரஸ் தான். எனவே இந்த வைரஸ் குறித்து அனைத்து விதமான தகவல்களையும் தெரிந்துகொள்ள உலகெங்கும் தீவிர ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி போலாந்து நாட்டிலும் கொரோனா பரவல் குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. அதில் கொரோனா உயிரிழப்புகள் குறித்து சில முக்கியமான முடிவுகளை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

     27% இந்தியர்கள்

    27% இந்தியர்கள்

    கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளும்போதே ஜீன் சோதனைகளை நடத்தவும் அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது குறிப்பிட்ட மரபணுவைக் கொண்டவர்கள் கொரோனாவால் உயிரிழக்கும் வாய்ப்புகள் அதிகம் என அதில் கூறப்பட்டுள்ளது. பியாலிஸ்டாக் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் ஆய்வின்படி, ஐரோப்பாவில் 9% பேர், இந்தியாவில் 27% பேர், போலாந்தில் 14% பேருக்கு இந்த வகையான மரபணு இருக்கலாம் என்று கூறப்படுகிறது., வயது, எடை மற்றும் பாலினத்திற்குப் பிறகு கொரோனா தீவிரத்தைத் தீர்மானிக்கும் நான்காவது மிக முக்கியமான காரணமாக இது இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

     ஏன் முக்கியம்

    ஏன் முக்கியம்

    இதுபோன்ற ஜூன் டெஸ்டிங், "தொற்றுநோய் ஏற்படுவதற்கு முன்பே, ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படும்போது அது எந்தளவு தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அடையாளம் காண உதவும்" என்று பேராசிரியர் மார்சின் மோனியுஸ்கோ கூறினார். கிட்டத்தட்ட 1,500 பேருடன் இந்த முதற்கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது வரும் காலத்தில் கொரோனா உயிரிழப்புகளைக் குறைக்க உதவும் என அந்நாட்டு ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

     உயிரிழப்புகள்

    உயிரிழப்புகள்

    அதேபோல குறிப்பிட்ட காரணங்களைத் தாண்டி ஒரு சில நாட்டில் மட்டும் கொரோனா உயிரிழப்புகள் ஏன் அதிகமாக உள்ளன என்பதைப் புரிந்து கொள்ளவும் உதவும். உலகெங்கும் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் சராசரியாக 20%ஆக உள்ளது. ஆனால், சில ஐரோப்பிய நாடுகளில் இந்த எண்ணிக்கை அதிகமாக உள்ளது. வேக்சின் போடுவதற்கு மக்கள் தயங்குவது ஒரு காரணம் என்றால் மரபணு மற்றொரு காரணமாக இருக்கலாம் என இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்தியா

    இந்தியா

    இந்தியர்கள் குறித்து இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதும் சற்று அச்சமூட்டுவதாகவே உள்ளது. ஏனென்றால், சுமார் 27% பேர் எளிதாக உயிரிழக்கலாம் என எச்சரித்துள்ளனர். ஏற்கனவே கொரோனா அலை அலையாகத் தாக்கி மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இது மிக முக்கிய ஆய்வு முடிவாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இதுவரை 4.85 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+